நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
ஹெலிகாப்டர்🚁 விண்வெளியில் பறக்குமா?
இரும்பு எப்படி துரு பிடிக்கிறது?

🔩 ஆணிகள், நாற்காலிகள், மேசைகள், சன்னல்கள், கதவுகள் போன்ற இரும்பு பொருட்களின் மீது நீர் பட்டு, ஈரமாக சில நாட்கள் இருக்கும் போது அல்லது மழைக் காலங்களில் ஈரக்காற்றில் சில நாட்கள் இருக்கும் போது துரு பிடிக்கின்றன.
🔩 இதற்கு காரணம், இரும்பு, ஈரக்காற்றில் இருக்கும் நீர் மற்றும் ஆக்சிஜனுடன் வேதி வினைபுரிந்து ஒரு மாறுபட்ட புதிய சேர்மமாக மாறுவதால் தான்.
🔩 இதில் இரும்பு மற்றும் ஆக்சிஜன் ஆகியவை தனிமங்கள். நீரானது ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்த ஒரு சேர்மம். இவை மூன்றும் வேதிவினை புரிந்து நீரேற்றம் பெற்ற இரும்பு(ஐஐஐ) ஆக்சைடு எனும் சேர்மமாக மாறுகிறது. இதுவே, பழுப்பு (பிரௌன்) நிறத்தில் நாம் பார்க்கும் துருவாகும்.
🔩 இந்த துரு, இரும்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளாகும். இதற்கு இரும்பிற்குரிய எந்த தனிப்பட்ட இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகளும் கிடையாது.
🔩 எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய காந்தத்தை இரும்பினால் (அல்லது எஃகு) ஆன, ஒரு பொருளுக்கு (நாற்காலி) அருகில் கொண்டு சென்றால், அந்த காந்தம் ஈர்க்கப்பட்டு விடும்.
🔩 ஆனால், அதே சிறிய காந்தத்திற்கு அருகே இரும்புப் பொருளின் துருத் துகள்களை கொண்டு சென்றால் அவை ஈர்க்கப்படாது. ஏனெனில், துருவுக்கு இரும்பின் இயல்பு இல்லை. அது ஒரு முற்றிலும் மாறுபட்ட பொருள்.
🔩 ஒரு இரும்புப் பொருளில் துரு பிடிக்கும் நிகழ்வு மேலும் மேலும் தொடர்ந்து நடைபெறும் போது, இரும்பு அரிக்கப்பட்டு (ஊழசசழளழைn), அப்பொருள் சேதமடைந்து விடும். இந்த சேதமானது, பொருளில் ஒரு பகுதியிலோ, முற்றிலுமோ ஏற்படக்கூடும்.
ஹெலிகாப்டர் விண்வெளியில் பறக்குமா?

🚁 ஹெலிகாப்டர்கள் அதிக உயரத்தில் பறக்க முடியாது.
🚁 அவற்றின் அதிக பட்ச பறக்கும் உயரம் 30,000 அடிகள் வரை தான்.
🚁 உயரத்தில் செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைவாக இருக்கும்.
🚁 விண்வெளியில் அதன் இறக்கைகளுக்கு போதிய அளவு தூக்கும் திறமை இருக்காது.
🚁 எனவே பூமியின் புவியீர்ப்பு அதை ஒரு கல்லை போல கீழே விழச் செய்யும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn