குலதெய்வம் தெரியவில்லையா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இதுதான்...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                குலதெய்வம் தெரியவில்லையா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இதுதான்...!!

                குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது தெரியுமா?


🌟 நமது குலத்தினை காக்கும் தெய்வம், தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.


🌟 குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிட முடியாதது..!


🌟 குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒருவர் தன்னுடைய இஷ்ட தெய்வத்தையோ, மற்ற பிற தெய்வங்களையோ வணங்கலாம்... வணங்காமலும் போகலாம்... 


🌟 ஆனால் குலதெய்வத்தை ஆண்டிற்கு ஒரு முறையாவது அந்த தெய்வம் இருக்கும் இடத்திற்கு சென்று வழிபட்டு வர வேண்டியது முக்கியமானது. ஆனால் பலருக்கும் தங்களின் குலதெய்வம் தெரியாமல் இருப்பதே துரதிஷ்டம் தான்.


🌟 ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கையை தேடி இருப்பார்கள்.


🌟 இதனால் சுமார் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக குலதெய்வம் கோவிலுக்கு செல்லாததாலும், அதைப்பற்றி பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாத காரணத்தாலும் பிற்கால சந்ததியர் தங்களின் குலதெய்வத்தையே மறந்திருப்பார்கள் அல்லது குலதெய்வம் தெரியாமல் இருப்பார்கள்.


🌟 அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரும்போது குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாமல் போய்விடும். இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.


🌟 அப்படிப்பட்டவர்கள் எப்படியாவது தங்களின் குலதெய்வத்தை கண்டறிய வேண்டியது அவசியம் என்றாலும் அதுவரை குலதெய்வமாக தமிழ் பெரும் கடவுளான முருகப்பெருமானை வழிபட்டு வருவது நன்மையை அளிக்கும்.


திருச்செந்தூர் முருகன் :


🌸 குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். பெரும்பாலான முருகப்பெருமானின் தலங்கள் குன்றின் மீது அமைந்திருக்கும். ஆனால் கடற்கரையோரம் அமைந்த திருத்தலமாக வேறுபட்டு நிற்பது திருச்செந்தூர் திருத்தலம்.


🌸 சூரபத்மனை வதம் செய்து வெற்றி வீரனாக வீற்றிருக்கும் செந்தில் ஆண்டவரை குலதெய்வம் தெரியாதவர்கள் தங்களின் குலதெய்வமாக நினைத்து கொண்டு வழிபட்டு வரலாம். இதன் மூலம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைய முடியும்.


🌸 மேலும் திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.


🌸 இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.


🌸 திருச்செந்தூர் குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.


வேறு தெய்வங்கள் :


🌸 இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடுள்ளது என்று பாருங்கள்.. பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது.


🌸 அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... குலதெய்வமாக வணங்கலாம்.


🌸 குறிப்பாக குலதெய்வம் தெரியாதவர்கள் அண்ணாமலையாரை குலதெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள் மகாலிங்கத்தை குலதெய்வமாக வழிபடலாம்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)