இந்த நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது? ஏன் தெரியுமா?

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                இந்த நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது? ஏன் தெரியுமா?

                வீட்டில் எந்தெந்த நாட்களில் கட்டாயமாக விளக்கு ஏற்றக்கூடாது?


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் சாஸ்திரம் சொல்லி இருக்கிறது. அதே சாஸ்திரத்தில் எந்தெந்த நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது என்றும் உள்ளது.


நிறைய பேருக்கு விளக்கு ஏற்றக்கூடாத நாட்கள் என்றால் என்னவாக இருக்கும் என்ற சந்தேகம் இருக்கும். சில பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும். அது எந்தெந்த நாட்கள்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது?


இறப்பு தீட்டு :


பங்காளிகளுடைய வீட்டில் இறப்பு நேர்ந்து விட்டது என்றால் நிச்சயமாக தங்களுடைய வீட்டிலும் காரியம் முடியும் வரை விளக்கு ஏற்றக்கூடாது.


16ஆம் நாள் காரியம் முடிந்த பின்பு, வீட்டை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு பூஜை ஜாமான்களை சுத்தம் செய்து, தலைக்கு குளித்துவிட்டு பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.


குழந்தை பிறந்த தீட்டு :


தங்களுடைய பங்காளிகள் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அவர்கள் புண்ணியா தானம் செய்யும் வரை தங்களுடைய வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது.


குழந்தை பிறந்த தீட்டு என்பது சுப தீட்டு. சில வீடுகளில் 7 நாட்கள் தீட்டு இருக்கும். சில வீடுகளில் 10வது நாள் புண்ணியா தானம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.


இது போன்ற தீட்டு நாட்களில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றுவதால், லட்சுமி கடாட்சத்தை இழக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். ஆகையால் கவனமாக இருங்கள்...


குறிப்பு :


தங்களுடைய வீட்டில் இறப்பு மற்றும் குழந்தை தீட்டு ஏற்பட்டு விட்டது. வீட்டில் 10 நாட்களோ, 16 நாட்களோ விளக்கு ஏற்றாமல் இருந்திருப்பீர்கள். இந்த நாட்கள் முடிந்த பிறகு முதலில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது இதை செய்யுங்கள்...


விளக்கு ஏற்றக்கூடிய அந்த முதல் நாள் அன்று வீட்டையும், பூஜையறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.


ஒரு சிறிய பித்தளை பாத்திரத்தில் சிறிதளவு மஞ்சள் பொடி, கோமியம் மற்றும் தண்ணீரையும் கலந்து, மாவிலையை இந்த தண்ணீரில் நனைத்து வீடு முழுவதும் மூலை முடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.


அதே சமயம் வீட்டில் இருப்பவர்களுடைய தலையிலும் இந்த தீர்த்தத்தை தெளிக்க வேண்டும். இப்படி இந்த தீர்த்தத்தை தெளிக்கும் போது 'ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தை உச்சரித்து கொள்ளுங்கள்.


பிறகு எப்போதும் போல உங்களுடைய பூஜையறையில் விளக்கு ஏற்றி இறைவழிபாட்டை மேற்கொள்ளலாம்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)