நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
அண்ணனுக்கும், தம்பிக்கும் உகந்த நாள்... இதென்ன புதுசா இருக்கு?
அண்ணனுக்கும், தம்பிக்கும் உகந்த நாள்...!!

சங்கடஹர சதுர்த்தி மற்றும் கிருத்திகை இவ்விரண்டும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு. இத்தகைய நாளில் விரதம் மேற்கொள்வது மிக மிக விசேஷம் ஆகும்.
தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கும், முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை நினைவூட்டும் வகையில் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாக கருதி விரதம் மேற்கொள்வர். அத்தகைய சிறப்பு நாளை பற்றி பார்க்கலாம் வாங்க...
சங்கடஹர சதுர்த்தி :
'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். அன்றைக்கு மாலையும், இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
எந்தவொரு தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் வழிபடும் தெய்வம் விநாயகப்பெருமான் தான்.
விநாயகரை போலவே விரதங்களுக்குள் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்துக்கு செல்ல வேண்டும். விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும்.
கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே மோதகம், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.
விநாயகருக்கு பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரை பூஜிப்பது சிறப்பான பலன்களை தரும். அதிலும் வன்னி மரத்தடியே அமர்ந்திருக்கும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை :
கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு விசேஷமானதாகும். இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.
கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதை குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது.
முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, விரதத்தை பூர்த்தி செய்கின்றனர்.
27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் மிகுதியான ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும், செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட ஒரு வித்தியாச நட்சத்திரமாக இருப்பது கிருத்திகை நட்சத்திரம்.
இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.
இந்நாளில் விரதமிருக்க நிறைவான அறிவு, நிலையான செல்வம், கலையாத கல்வி, நீண்ட ஆயுள், நல்ல வாழ்க்கை துணை, குணமுள்ள குழந்தைப்பேறு என்று எல்லா பலன்களும் கிடைக்கும்.
சங்கடஹர சதுர்த்தி.. கார்த்திகை.. இந்த இரண்டும் இணைந்த நன்னாளில் அண்ணன் ஆனைமுகத்தானையும், தம்பி ஆறுமுகத்தையும் வணங்கி வளம் பெறுவோம்..!!
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn