மனதை கொள்ளை கொள்ளும்.. தேங்காய்ப்பட்டினம் கடற்கரை..!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


மனதை கொள்ளை கொள்ளும்.. தேங்காய்ப்பட்டினம் கடற்கரை..!


🌊 கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 54கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து ஏறத்தாழ 31கி.மீ தொலைவிலும், மார்த்தாண்டத்திலிருந்து ஏறத்தாழ 14கி.மீ தொலைவிலும் அமைதியான சூழலில் அமைந்துள்ள இடம் தான் தேங்காய்ப்பட்டினம் கடற்கரை.


சிறப்புகள் :


🌊 தேங்காய்ப்பட்டினம் கடற்கரை கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.


🌊 அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி முழுவதும் தென்னை மரங்கள் சூழ்ந்து இயற்கை எழிலோடு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.


🌊 நாம் குடும்பத்துடன் சென்று கடற்கரைப் பகுதியில் ஆனந்தமாக அலைகளோடு விளையாடுவதற்கு ஏற்ற சுற்றுலாத் தலமாக இந்த கடற்கரை விளங்குகிறது.


🌊 அழகான இந்தக் கடற்கரையில் வெள்ளை மணல்கள் பரந்து விரிந்து பார்ப்பதற்கு நம் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அமைந்திருக்கும்.


🌊 இந்தக் கடற்கரையை தேங்காய்ப்பட்டினம் காயல் என்று அழைப்பார்கள்.


🌊 இங்குள்ள படகுகளில் சவாரி செய்வது தனிப்பரவசமாக இருக்கும். கடலின் அழகுகளையும், அவற்றில் சூழ்ந்திருக்கும் தென்னை மரங்களின் காட்சிகளையும் கண்டு ரசித்துக் கொண்டு படகுகளில் ஆனந்தமாக சவாரி செய்யலாம்.


🌊 தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் முக்கிய ஆறான தாமிரபரணி ஆறு கலக்கின்றது.


🌊 இந்தக் கடற்கரைக்கு நீங்கள் சென்றால் கண்களை கவரும் வகையில் அழகான இயற்கையோடு அமைந்திருக்கும் கடற்கரை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.


எப்படி செல்வது?


🌊 நாகர்கோவிலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.


எப்போது செல்வது?


🌊 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.


எங்கு தங்குவது?


🌊 நாகர்கோவிலில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.


இதர சுற்றுலாத் தலங்கள் :


🌊 மகாத்மா காந்தி மண்டபம்.

🌊 பத்மநாபபுரம் அரண்மனை.

🌊 திற்பரப்பு நீர்வீழ்ச்சி.

🌊 மாத்தூர் தொட்டிப்பாலம்.





 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)