நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
வெள்ளி கடற்கரை !!

🏖 வெள்ளி கடற்கரை, கடலூரில் இருந்து ஏறத்தாழ 2கி.மீ தொலைவிலும், பிச்சாவரத்தில் இருந்து ஏறத்தாழ 58கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 49கி.மீ தொலைவிலும் அமைந்து சுற்றுலா பயணிகளை அதிகமாக தன்வசம் கவரும் வகையில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
🏖 இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது.
🏖 மேலும் இங்கு அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன.
🏖 வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டையான புனித டேவிட் கோட்டை உள்ளது.
🏖 கடலூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி கடற்கரைக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
🏖 நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாகவும் இங்கு செல்லலாம்.

🏖 மாலை நேரங்களில் கதிரவனின் ஒளியும்... அலையின் அழகும்... மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
🏖 கடற்கரைக்கு தெற்கே உள்ள தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல காட்சியளிக்கிறது. அலையின் வேகம் குறைந்து இறுதியில் நுரைத்தலுடன் அமைதியாக ஓடி வரும் அலையின் அழகையும் ரசிக்கலாம்.
🏖 மேற்கு நோக்கி உள்ள ஒரு நதியில் உள்ள அடர்ந்த மாங்குரோவ் காடுகளில் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற சூழல் இருக்கிறது.
🏖 மேலும் குழந்தைகளுடன் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான காற்றை சுவாசித்து, மகிழ்ச்சியுடன் மணலில் விளையாடி கடல் அலைகளில் நனைந்து கொள்வது மனதிற்கு ஒருவிதமான மகிழ்ச்சியை அளிக்கும்.
🏖 கடலூரில் உள்ள மக்கள் மட்டுமில்லாமல் மற்ற சுற்றுலாப்பயணிகளையும் அதிகமாக இந்த கடற்கரை கவருகிறது.
எப்படி செல்வது?
🌟 கடலூருக்கு அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
🌟 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
🌟 கடலூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
🌟 பிச்சாவரம் அலையாத்தி காடுகள்.
🌟 டேவிட் கோட்டை.
🌟 சாமியார் பேட்டை கடற்கரை.

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP