ரம்மியமாக காட்சியளிக்கும்... வெள்ளோடு பறவைகள் சரணாலயம்..

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP


ரம்மியமாக காட்சியளிக்கும்... வெள்ளோடு பறவைகள் சரணாலயம்..!


🐦 ஈரோட்டிலிருந்து ஏறத்தாழ 15கி.மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து ஏறத்தாழ 12கி.மீ தொலைவிலும் இயற்கை எழில் மிகுந்த அமைப்புடன் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 


🐦 இந்த சரணாலயம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பறவைகளின் வாழ்விடமாக இந்த சரணாலயம் திகழ்கிறது. 


சிறப்புகள் : 


🐦 வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கோடையிலும் ஏரியில் உள்ள தண்ணீர் வற்றாததால் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சியளிக்கிறது. 


🐦 இந்த சரணாலயத்தில் ஆங்காங்கே உள்ள மரங்களின் கிளைகளில் ஏராளமான பறவைகள் தங்கியுள்ளன. அவைகள் கூட்டமாக பறந்து செல்வதை பார்க்கும்போது நம் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கும். 


🐦 அதேபோல் சரணாலயத்தில் இருக்கும் பறவைகள் ஏரியில் உள்ள மீன்களை பிடித்து சாப்பிடும் காட்சிகளை கண்டு ரசிக்க முடியும். மேலும், இங்குள்ள பறவைகள் நம் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கும். 


🐦 இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பறவைகளும் உள்ளன. 


🐦 வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு என நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


🐦 பறவைகள் சத்தமிடும் ஒலிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர். 


🐦 ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. 


எப்படி செல்வது?


🐦 ஈரோட்டிலிருந்து வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.


எப்போது செல்வது?


🐦 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.


எங்கு தங்குவது?


🐦 ஈரோட்டில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.


இதர சுற்றுலாத் தலங்கள் :


🐦 கொடிவேரி அணை.

🐦 பவானிசாகர் அணை.

🐦 பண்ணாரிஅம்மன் கோவில்.

🐦 கொடுமுடி.





 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP

Post a Comment

0Comments

Post a Comment (0)