நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
சதயம் நட்சத்திரம் பற்றிய தகவல்கள்..!
சதயம் நட்சத்திரம்

27 நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்து நான்காவது இடத்தை பெறுவது சதயம் நட்சத்திரமாகும். இந்நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் ஆவார். இது கும்ப ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் கோ, ஸ, ஸி, ஸீ, தோ, தௌ ஆகியவையாகும்.
நட்சத்திரத்தின் பொது பலன்கள் :
சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகுபகவான் என்பதால் உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் உண்மையாக பழகுபவர்களாக இருப்பார்கள். நல்ல அறிவாளியாகவும் நேர் வழியில் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். தெளிவாக பேசுபவர்களாகவும், கேலிக்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பகைவர்களை ஒட ஒட விரட்டுவார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பார்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கும் சுபாவம் இருந்தாலும் நேரம் பார்த்து அடி கொடுப்பார்கள். பிறர் சொத்துகளுக்கு ஆசைபட மாட்டார்கள். ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். எல்லாருக்கும் உதவக் கூடிய குணம் இருப்பதால் சொத்தை கூட விற்க வேண்டி நிலை வரும். கொடுத்த வாக்கை பிச்சை எடுத்தாவது காப்பாற்றி விடுவார்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள். மேலும், இவர்களுக்கு சற்று முன் கோபம் அதிகமிருக்கும்.
நட்சத்திரத்தின் திசை பலன்கள் :
சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் இருக்கும். ராகுவானது பலம் பெற்று அமைந்தால் கல்வியில் ஈடுபாடும், நல்ல நடத்தையும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ராகு பலமிழந்திருந்தால் பெரியோர்களை மதிக்காத நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை, பாவ சொற்களை பேசும் அமைப்பு உண்டாகும்.
இரண்டாவதாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கடந்த கால பிரச்சனைகள் விலகி கல்வியில் முன்னேற்றமும், பெற்றோருக்கு பெருமையும் சேரும். குடும்ப சூழலும் சிறப்பாக அமையும்.
மூன்றாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொருளாதார உயர்வும், அசையா சொத்து சேர்க்கையும், பழைய பொருட்களால் அனுகூலமும், வேலையாட்களின் ஆதரவும் கிட்டும்.
நான்காவதாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பூர்வீக வழியில் அனுகூலமும், பிள்ளைகளால் மேன்மையும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள்.
ஐந்தாவதாக வரும் கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறுவதால், ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும்.
வழிபாட்டு ஸ்தலங்கள் :
திருச்சிராப்பள்ளியில் அருள்மிகு உத்தமர் திருக்கோவில்.
குளித்தலை கடம்பவனேசுவரர் திருக்கோவில்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்.
முருக பெருமான் ஐந்து ஸ்தலங்களில் சிவ பிரதிஷ்டை செய்ய வழிபட்ட கோவில் கடம்பனூர், பெருங்கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளம் கடம்பனூர், வாழிக்கடம்பனூர் ஆகியவையாகும்.
பொருந்தாத நட்சத்திரங்கள் :
ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாதவையாகும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn