நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
ராசி கற்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றிய தகவல்கள்...!!
ராசி கற்கள் மற்றும் அதன் பலன்கள்...!!

ராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும். ராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த ராசி கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது ராசிக்கு பொருத்தமில்லாத ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சில சமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிக் கற்கள் பொருத்தமானவை என்பது பற்றி இங்கு பார்ப்போம.
ராசி மற்றும் கற்கள்:
ராசி கற்கள்மேஷம் பவளம் ரிஷபம் வைரம் மிதுனம் மரகதம் கடகம் முத்து சிம்மம் மாணிக்கம் கன்னி மரகதம் துலாம் வைரம் விருச்சிகம் பவளம் தனுசு கனக புஷ்பராகம் மகரம் நீலக்கல் கும்பம் நீலக்கல் மீனம் கனக புஷ்பராகம்
ராசி கற்களின் பலன்கள் :
மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிஷ்டம் உண்டாகும்.
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிஷ்டசாலியாகலாம்.
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிஷ்டத்தையும் அளிக்க வல்லது.
துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிஷ்டம் உண்டாகும்.
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn