அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில்..!

                அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை ஆகும். இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாகவே இந்தத் திருக்கோவில் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது.


கோவில் வரலாறு :


படைப்புத் தொழிலில் ஆணவம் கொண்டிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். எனவே பிரம்மனை சிறையில் அடைத்தார் முருகன்.


பிறகு, ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், 'பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். 'ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். 'அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். 'உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.


அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்படுகிறார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.


கோவில் சிறப்புகள் :


இத்திருத்தலத்தில் சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, மார்பில் பூணூலும், ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாக காட்சி தருகிறார். 


சுவாமிமலை ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை ஆகும். மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கல் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.


இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதல் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப்பெருமானை சுற்றியும் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது.


மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். திருவிழாக்கள்:


10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாவாகும். இதுதவிர வைகாசி விசாகப்பெருவிழா, நவராத்திரிப்பெருவிழா, கந்தசஷ்டி பெருவிழா மற்றும் தைப்பூசப் பெருவிழா ஆகியவை கொடியேற்றத்துடன் நடைபெறுகிறது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)