கந்தசஷ்டி விரதம்.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                கந்தசஷ்டி விரதம்.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

                கந்தசஷ்டி... என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


கந்தசஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும், திருமண பாக்கியம் கைகூடி வரும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். எனவே முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபடலாம்.


ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்கள் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகின்றது. விரதம் இருப்பவர்கள் மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது.


அந்த வகையில் விரதம் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...


என்ன செய்யலாம்?


கந்தசஷ்டி ஆரம்பம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம்.


விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரம் குளிக்க வேண்டும். தினமும் காலை, மாலை வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும்.


இந்த ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம்.


ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, குலதெய்வத்தை மனதார வணங்குங்கள்.


பின் சூரசம்ஹாரம் என்னும் நிகழ்ச்சியை முருகன் கோயிலில் தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.


என்ன செய்யக்கூடாது?


ஆறாவது நாளான கந்தசஷ்டி அன்று எந்தவொரு உணவும் உண்ணாமல் பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.


சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது.


இரவு தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும்.


யாரையும் திட்டக்கூடாது. எந்த காரணம் கொண்டும் கோபமாக பேசக்கூடாது.


முடிந்த வரை காலணியை தவிர்ப்பது நலம்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)