லேப்டாப்பின் ஆயுட்காலம் நீட்டிக்க... சின்ன சின்ன டிப்ஸ்...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                லேப்டாப்பின் ஆயுட்காலம் நீட்டிக்க... சின்ன சின்ன டிப்ஸ்...!!

                லேப்டாப்பை கையாளுவது எப்படி?


லேப்டாப்பை சரியாக பராமரித்தால் தான் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். அதோடு பிரச்சனைகள் இல்லாமல் வேகமாக செயல்படும். 


எல்லா நேரத்திலும் சார்ஜில் வைக்க வேண்டாம் :


💻 சிலர் பல நேரங்களிலும் லேப்டாப்பை சார்ஜில் போட்டு வைத்திருப்பார்கள். எப்போதும் சார்ஜருடன் லேப்டாப்பை தொடர்ந்து இணைத்திருக்க கூடாது. சார்ஜருடன் இணைந்திருப்பது உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் நீண்ட கால பயன்பாட்டில் உள் கூறுகளை நிச்சயமாக பாதிக்கும்.


லேப்டாப்பை திறந்து மூடுவது :


💻 லேப்டாப்பை திறக்கும் போது ஒரு பக்கத்தில் இருந்து திறக்கக்கூடாது, நடுவில் கை வைத்து தான் திறக்க வேண்டும். ஒரு பக்க மூலையிலிருந்து திறப்பது ஒரு முனையில் அழுத்தத்தை அதிகரித்து லேப்டாப்பில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.


சாப்பிடும் போது லேப்டாப்பை உபயோகிக்க வேண்டாம் :


💻 எண்ணெய் போன்ற உணவுகளை தொட்டுவிட்டு லேப்டாப்பின் பேட் மற்றும் விசைப்பலகை மீது கை வைப்பதால், சாதனத்தின் உள்ளே எண்ணெய் செல்லும், பின்னர் இது பெரும் செலவு வைக்கும்.


குளிர்ந்த சூழலில் :


💻 லேப்டாப்பை எப்போதும் நல்ல சூழலில் வைத்திருங்கள். பயணம் செய்ய நேரிட்டால், லேப்டாப் பத்திரமாக இருக்க, அனைத்து முன் எச்சரிக்கையையும் செய்யுங்கள். பயணத்தில் அதை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, லேப்டாப்புக்கு தேவையான அளவு சுத்தமான காற்று கிடைக்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதனை தூசி மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விலக்கியே வைக்கவும்.


ஆன்டி-வைரஸ் :


💻 ஆன்டி-வைரஸ் மென்பொருள் சந்தையில் பல வகைகள் உள்ளன. அசல் உரிமத்துடன் ஒரு மென்பொருளை வாங்கி, லேப்டாப்பில் நிறுவுங்கள். வைரஸ் லேப்டாப்பை வெகுவாக பாதிக்கும். லேப்டாப்பின் வேகத்தை குறைப்பது முதல் அதன் செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் வரை வைரஸ் பல விளைவுகளை ஏற்படுத்தும்.


மின்சாரம் :


💻 உணவு உண்ணுவதற்கு செல்லும் போதோ அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு செல்லும் போதோ லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைத்திருங்கள். இது மின்சார பயன்பாட்டை குறைத்து, லேப்டாப்புக்கு அதிக ஆயுளை தரும்.


அதிக நேரம் :


💻 தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் ஓட விடாதீர்கள். தொடர்ச்சியாக இயக்கத்தில் இருந்தால், லேப்டாப் அதிக சூடாகும். சில மணி நேரத்தில் அணைக்கவில்லை என்றால், அதன் செயல்பாட்டின் வேகமும் குறைந்து விடும். லேப்டாப்பின் ஆயுள் நீடிக்க வேண்டுமென்றால், உபயோகிக்காத நேரத்தில் ஷட்டவுன் செய்யவும்.


தட்டையான பரப்பு :


💻 எப்போதும் லேப்டாப்பை ஒரு தட்டையான பரப்பில் வைத்திருந்தால் அது லேப்டாப்பை சேதப்படுத்தாமல் பாதுகாக்கும். உங்கள் மெத்தையின் மேல் வைத்திருந்தாலும் கூட, மெத்தையில் இருக்கும் தூசிகள் மற்றும் நார்களை லேப்டாப்பில் உள்ள மின் விசிறி உள்ளிழுக்கும். இதனால் லேப்டாப்பின் அடிப்பாகம் சூடாகும். அதனால் மேஜை போன்ற தட்டையான பரப்பை பயன்படுத்துங்கள்.


சுத்தப்படுத்தவும் :


💻 லேப்டாப்பை பராமரிக்க மிக எளிய வழிமுறை தான் இது. பல் தேய்க்கும் ப்ரஷ்-ஐ பயன்படுத்தி லேப்டாப்பின் மின் விசிறி இடுக்கு, தட்டச்சு பலகையின் மேல் பதிந்திருக்கும் தூசியை சுத்தப்படுத்துங்கள். மெல்லிய துணியை பயன்படுத்தி திரையை துடைக்கவும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)