இனிப்பை உண்ட பிறகு தேநீரின் இனிப்பு சுவை குறைவது ஏன்?

Punniya seelan
0

 

நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                இனிப்பை உண்ட பிறகு தேநீரின் இனிப்பு சுவை குறைவது ஏன்?

                புகை எவ்வாறு உருவாகிறது?


💨 புகை என்பது எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக ஏற்படுவதாகும். எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது. 


💨 பெரும்பாலான எரிபொருட்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர், வாயுவாகிய ஹைட்ரஜன், உயிர்வளியாகிய ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் மற்றும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். 


💨 சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடித்தால் இறுதி விளைவாக கரியமிலவாயு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும்.


💨 இவை தீங்கற்றவைகளாகும். எரிபொருளில் கந்தகமிருந்தால் கந்தக டை ஆக்ஸைடு சிறிதளவு வெளிப்படும். இது காற்றோடு அல்லது ஈரத்தோடு சேரும்போது அரிமான அமிலமாக (ஊழசசழளiஎந யஉனை) மாறும்.


💨 முழுமையாக எரியும் போது எரிபொருளானது உயர் வெப்பத்தில் ஆக்சிகரணத்துக்காக போதிய அளவு காற்றை எடுத்துக் கொள்ளும். இந்நிலைமை கெட்டித்தன்மையுள்ள எரிபொருட்களுக்கு சரியாக அமையாது. இதனால் அவை புகையை வெளிப்படுத்துகின்றன.

இனிப்பை உண்ட பிறகு தேநீரின் இனிப்பு சுவை குறைவது ஏன்?


🍨☕இப்பொழுது நாம் ஒரு இனிப்பான பண்டத்தைச் சுவைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அந்தப் பண்டத்தின் சுவையை நமது மூளை கிரகித்துக் கொண்டு, நம் நாவிற்கு இனிப்பு சுவையை உணர்த்துகிறது.


🍨☕இந்நேரத்துக்கு நமது மூளை அந்த இனிப்பு அளவிற்கு (ளறநநவநௌள iனெநஒ) பழக்கமாகி இருக்கும். இதனால், இதைவிடக் குறைந்த அளவிலான இனிப்பினை உணர இயலாது.


🍨☕இப்பொழுது நாம் தேநீர் அருந்தும் போது, நமது மூளைக்கு அது ஏற்கனவே பழக்கமான அளவுக்கு இனிப்புத் தன்மையின் அளவு (ளறநநவநௌள iனெநஒ) கிடைக்கவில்லை. அதனால் நமது மூளையினால் குறைந்த அளவு இனிப்புத் தன்மை கொண்ட தேநீரின் இனிப்பை உணர முடிவதில்லை.


🍨☕அதே நேரம், தேநீர் அருந்திய பின்னர் இனிப்பு அல்லாத பிற சுவை கொண்ட பண்டத்தைச் சுவைக்கும் போது, அப்பண்டத்தின் சுவையை உணர்வதில் சிக்கல் ஏதும் வருவதில்லை.


🍨☕அதற்கு காரணம், இனிப்பு சுவையை உணர்வதற்கான சுவை அரும்புகள் இப்போது வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. (ஒவ்வொரு சுவையையும் உணர்வதற்கென்று தனித்தனி அரும்புகள் நமது நாவில் உண்டு)


🍨☕அதனால், இனிமேல் தேநீரின் சுவையை இனிப்பு உண்ட பின்னரும் உணர வேண்டுமானால், இனிப்பை உண்ட பின் ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து சிறிது நீர் அருந்திய பின்னர் தேநீர் அருந்தலாம்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)