நாமக்கல் ஆஞ்சநேயர்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                நாமக்கல் ஆஞ்சநேயர்..!

                நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்...!!


அருள்மிகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், தமிழ்நாட்டில் நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினாலான ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. ஆஞ்சநேயர் சிலை வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது.


கோவில் வரலாறு :


இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அப்போது 'இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். இராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.


கோவில் பரிகாரங்கள் :


இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. மேலும், கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.


இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.


ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடைமாலை சாத்துதல், பூமாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. மேலும், வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு நடத்தப்படுகிறது.


கோவிலில் சிறப்புகள் :


மிக பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையானது காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றகின்றார். தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில் இது.


இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவிலாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை ஆஞ்சநேயர் தொழுதபடி இருக்கிறார்.


முக்கிய திருவிழாக்கள் :


மார்கழி மாதம் அமாவாசை அனுமன் ஜெயந்தி அன்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலில் கூடுகின்றனர்.


வாரத்தின் ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. தீபாவளி, பொங்கல், கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு தினங்கள் ஆகிய வருடத்தின் முக்கிய விசேஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் மிக அதிகஅளவில் இருக்கும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)