மூல நட்சத்திரம் பற்றிய தகவல்கள்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                மூல நட்சத்திரம் பற்றிய தகவல்கள்..!

                மூலம் நட்சத்திரம்


27 நட்சத்திரங்களின் வரிசையில் பத்தொன்பதாவது இடத்தை பெறுவது மூல நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மூலம், தனுசு ராசிக்குரியதாகும். இது இடுப்பு, தொடை, நரம்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் யே, யோ, பா, பீ ஆகியவையாகும்.


நட்சத்திர குணங்கள் :


மூல நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களில் ஈடுபடுவார்கள். கம்பீரமான தோற்றமும், தெய்வ பக்தியும் எந்த பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரமும் கொண்டவர்கள்.


'ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்" என்ற பழமொழி உண்டு. இதன் உண்மையான விளக்கம் ஆனி மூலம் அரசாளும் அதாவது ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்து சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். பின் மூலம் நிர்மூலம் என்பது சந்திரனை பாவ கிரகங்கள் பார்வை செய்வதால் உண்டாவது. எனவே மாமனாருக்கு ஆகாது என பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். சிறு வயதிலேயே நல்ல உடல் வாகும், பேச்சு திறமையும் சிறப்பாக இருக்கும்.


நட்சத்திரத்தின் பொது பலன்கள் :


மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதுமுள்ள தசா புக்திகளை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலையும், தாய்க்கு பிரச்சனைகளும் உண்டாகும்.


இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும். இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும். செல்வாக்கும் பெருகும்.


மூன்றாவதாக வரும் சூரிய திசை 6 வருடங்களும் நான்காவதாக வரும் சந்திர திசை 10வருடங்களும் நடைபெறும் என்பதால் இத்திசை காலங்களில் நன்மை தீமை கலந்த பலன்களைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். உடலில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.


மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை ஐந்தாவது திசையாகும். செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். வாழ்வில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சமும், சுகவாழ்வும், சொகுசு வாழ்வும் உண்டாகும்.


வழிபாட்டு ஸ்தலங்கள் :


சென்னைக்கு தெற்கில் பல்லாவரத்துக்கு மேற்கில் 3.கி.மீ தொலைவிலுள்ள அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் ஸ்தலம்.


திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5.கி.மீ தொலைவில் உள்ள வடக்கரை மாந்துறை எனப்படும் ஆம்ரவனேஸ்வரர், அன்னை அழகம்மை ஆலயம்.


மயூரநாதர் அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் ஸ்தலம்.


திருச்செந்தூருக்கு 14 கி.மீ தொலைவிலுள்ள விஜய காசி கொண்ட பாண்டீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி அருள் புரியும் திருத்தலம்.


சீர்காழிக்கு அருகிலுள்ள சிவலோகத்தியாகேசர் அருள் புரியும் ஸ்தலம்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)