வருடம் ஒருமுறை தீபாவளி🎇.. ஆயுளுக்கே ஒருமுறை தல தீபாவளி👫... இத்தனை 🎉 ஸ்பெஷல் இருக்கா?
👫🎉தீபாவளி... தல தீபாவளி 👫🎉

வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை. ஆனால், 'தல தீபாவளி" ஆயுளுக்கே ஒரு முறைதான் கொண்டாடப்படுகிறது.
சிறு வயது முதல் எத்தனையோ தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை யாராலும் மறக்க முடியாது.
வாழ்நாள் முழுக்க உடன் பயணிக்கப்போகும் துணையோடு சேர்ந்து கொண்டாடுவது முதல் தீபாவளி அதாவது தல தீபாவளி எப்பவுமே 'ஸ்பெஷல்" தான்.
தல தீபாவளி எப்போதுமே பெண் வீட்டில்தான் கொண்டாடப்படுகிறது. புதிதாக திருமணமான தம்பதிகளை பெண்ணின் பெற்றோர் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மணமகனின் வீட்டிற்கு சென்று பூ, பாக்கு, வெற்றிலை, பழம், புதுத்துணி, இனிப்பு வகைகள், சீர்கள் வைத்து தல தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும், தல தீபாவளி மட்டும் மணமகள் வீட்டிலே கொண்டாடப்படும் என்பதால் தல தீபாவளி தனிச்சிறப்பு மிக்க பண்டிகையாக பார்க்கப்படுகிறது.
தல தீபாவளியில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
எண்ணெய் குளியல் :
தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து தம்பதிகள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு வைக்கப்படும் எண்ணெய் கிண்ணத்தில், மாமனார் வசதிக்கேற்ப வாங்கிய தங்க மோதிரம் இருக்கும்.
புது மாப்பிள்ளைக்கு மச்சினன்; அதாவது பெண்ணின் சகோதரர் தான் எண்ணெய் வைப்பார். அவர் எண்ணெயை தலைக்கு மட்டுமல்லாமல் உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்வார். சில சமயம் மசாஜ் என்ற பெயரில் புது மாப்பிள்ளை அடிவாங்குவதும் உண்டு.
புத்தாடை :
எண்ணெய் குளியல் முடிந்தவுடன் சாமி கும்பிட்டுவிட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள். பின் பட்டாசுகளை விருப்பம்போல் குடும்பத்துடன் வெடித்து மகிழ்வார்கள்.
பலகாரங்கள் :
தீபாவளியன்று மாமியார் வீட்டில் செய்த பலகாரங்கள், மாமனார் கடையில் வாங்கிய இனிப்புகள் என பலவிதமான பலகாரங்களும் இருக்கும்.
சாப்பாடு :
தல தீபாவளியின் ஸ்பெஷலே மாமியார் வீட்டு சாப்பாடுதான். மாப்பிள்ளை என்பதால் பெண்ணின் அம்மா அதாவது மாமியார், மாப்பிள்ளைக்காக விதவிதமாக சமைத்து வைத்திருப்பார்.
சாப்பாடு, இட்லி, பலகாரங்கள், நாட்டுக்கோழி குழம்பு, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என அன்றைய சமையலில் அனைத்து விதமான பதார்த்தங்களும் இருக்கும்.
கூட்டுக்குடும்பமாக இருந்தால் மதிய உணவிற்கு பின் புது மாப்பிள்ளையை வைத்து சில விளையாட்டுகளும் விளையாடுவதுண்டு. அன்றைய பொழுது புது மாப்பிள்ளைக்கு பல சந்தோஷங்களோடு கழியும்.
பண்டிகை முடிந்து புது மாப்பிள்ளை அவர் வீட்டிற்கு கிளம்பும் முன் இன்று ஒருநாளோடு தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டதே என்று வருத்தப்படுவதும் உண்டு.
புது மாப்பிள்ளைக்கு செலவு :
தனது மச்சினன், மச்சினிக்கு புத்தாடைகளும், இனிப்பும், பட்டாசும் வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். மாமியார் வீட்டில் இராஜ மரியாதை அனுபவித்தாலும், சில செலவுகளை செய்துதானே ஆக வேண்டும்.
தல தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு இந்த சந்தோஷ தருணங்கள் மீண்டும் கிடைப்பதில்லை. இப்படி தல தீபாவளி பண்டிகை பல சந்தோஷங்களுடன் களைகட்டும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn