நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
இனி திரும்ப வருமா? இதுபோன்ற நாட்கள்🎉.. ஏங்கும்💃 80ஸ், 90ஸ் கிட்ஸ்.. நாங்கள் நினைவூட்டுகிறோம்😇...!!
தீபாவளி.. ஆனால் திரும்ப வராது இதுபோன்ற நாட்கள்..!!

👪 இந்த படத்தைப் பாருங்க!... எவ்வளவு அழகா இருக்கு. போன தலைமுறையில குழந்தைகள் எல்லோரும் பெரியவங்க அரவணைப்பில் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தாங்க. ஆனா, இந்த தலைமுறையில குழந்தைகளுக்கு டிவி, போன்-ல தான் சந்தோஷமே இருக்கு. ஆனா உண்மையான சந்தோஷங்கிறது அந்தக்காலத்தில் நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அத்தை-னு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததுதான்னு இந்த படம் தெளிவா காட்டுது.
👪 அப்ப எல்லாம் தீபாவளிய 3 நாள், 4 நாள்-ன்னு கொண்டாடுவாங்க. வீட்டுக்கு அத்தை, மாமா, மாமா பசங்க-ன்னு சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க. அவுங்களோட சேர்ந்து நாமும் விளையாடுவோம். அதுமட்டுமா தீபாவளி தொடங்குனதுல இருந்து முடியற வரைக்கும் வீட்ல விதவிதமா பலகாரம் செஞ்சு சாப்பிடறதும், தாத்தா பாட்டி அந்த பலகாரங்கள தன்னோட பேத்தி, பேரன்களுக்கெல்லாம் ஊட்டி சந்தோஷப்பட்டு ஒரே சந்தோஷ மழையில நனைவாங்க.
👪 அந்த சந்தோஷத்த இந்த தலைமுறை இழந்துருச்சுன்னு தான் சொல்லணும். அந்த அளவுக்கு கூட்டுக்குடும்பங்கிறது மாறி தனித்தனியா வாழ்ந்துட்டு வரோம்.
👪 இந்த படத்துல பாருங்க!.. கண்ணாடிய பார்த்து தலைசீவிக்கிட்டு இருக்காறே இவர் தான் அப்பா-னு நினைக்கிறேன். தீபாவளிக்கு வெளிய போய் பட்டாசு எல்லாம் வாங்க ரெடியாகுறாரு போல. என்னதான் வீட்ல வேஷ்டி, சட்டை-னு கலர் கலரா போட்டாலும் வெளிய போகும்போது பாருங்களேன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தான்.
👪 இந்த படத்தைப் பார்த்தா உங்களுக்கு ஒரு அதிசயம் தெரியனுமே... என்னங்க தெரியலயா... இருங்க அத நானே சொல்றேன். அந்த அதிசயம் என்னனா?.... மாமியரும், மருமகளும் ஒன்னாச் சேந்து பலகாரம் செய்றது தாங்க.
👪 தீபாவளிக்கு 2 நாளுக்கு முன்னாடியே அம்மா, அதிரசம், ரவா லட்டு-ன்னு விதவிதமா பலகாரம் செய்றாங்க. அவங்களுக்கு ஒத்தாசையா பாட்டியும் உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. என்னதான் கடையில இனிப்பையும், பலகாரத்தையும் வாங்கி சாப்பிட்டாலும் பாட்டியும், அம்மாவும் செய்ற பலகாரத்தோட டேஸ்ட்டே தனிதாங்க.
👪 அம்மாவ பாருங்களே, அனல் வீசற நெருப்பு பக்கத்துல உக்காந்துக்கிட்டு இருந்தாலும் கொஞ்சம் கூட அலுப்பில்லாம எல்லா பலகாரங்களையும் ரசிச்சு செஞ்சுக்கிட்டு இருக்காங்க... அம்மாவ சுத்தியும் ஒரே பலகாரமா இருக்கு. பார்க்கறப்பவே சாப்பிடணும் போல இருக்கு.... உங்களுக்கு இதுமாதிரி தோன்றியிருக்கணுமே...
👪 சுவத்துல சாஞ்சபடி இருக்குறது யாருன்னு உங்களுக்குத் தெரியுதா... அவுங்கதாங்க இந்த வீட்டு இளவரசியா இருந்தவங்க.. தீபாவளிக்கு ஊருக்கு வந்தவங்க... தன்னோட அம்மாவும், அண்ணியும் எப்படி பலகாரம் செய்றாங்கனு பார்த்துக்கிட்டு, ஒரு வேலையும் செய்யாம இன்னும் இளவரசியா வேலை வாங்கிட்டு இருக்காங்க.
👪 குட்டி தம்பி வேற அம்மாவோட முதுகுக்கு பின்னாடி நின்னு, முந்தானைய புடிச்சுக்கிட்டு அம்மா எப்ப வேலையெல்லாம் முடிச்சுட்டு நம்மள தூக்குவாங்கன்னு ஏக்கத்தோட எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கான்.
👪 அங்க பாருங்களேன்.. வெச்ச கண்ணு வாங்காமா.. பலகாரத்தையே பார்த்துக்கிட்டு ஒரு தம்பி வாசப்படியில நிக்குறத.... எனக்கென்னவோ இந்த தம்பி ஆர்வமா பார்க்கறத பார்த்தா எல்லா பலகாரத்தையும் யாருக்கும் கொடுக்காமா ஒரே ஆளா சாப்பிட்டுருவான் போல.
👪 இந்த படத்தை பார்க்கறப்பவே உங்களுக்குள்ள ஒரு சந்தோஷம் வந்துருக்குமே. இன்றைய காலக்கட்டத்துல இப்படி கூட்டுக்குடும்பமா வாழ முடியலைன்னாலும் தீபாவளி, பொங்கல்-ன்னு பண்டிகை சமயத்துலயாவது சொந்தக்காரங்களோட சேர்ந்து கூட்டுக்குடும்பமா பண்டிகைய கொண்டாடுங்க.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn