நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க காரணம் என்ன?
ஈரமான மணற்பகுதியில் எளிதாக நடக்க காரணம் என்ன?

🐾 எந்த ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலக்கூறுகளுக்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை நிலவுகிறது. இவ்விசையினை பிணைப்பு விசை என்பர்.
🐾 ஆனால் இருவேறு பொருட்கள் ஒன்றோடொன்று சேரும் போது, அவற்றின் மூலக்கூறுகளுக்கிடையேயும் ஒரு வகையான கவர்ச்சி விசை உண்டாகிறது. அதனை ஒட்டு விசை எனக் கூறுவர்.
🐾 மணலும், தண்ணீரும் கலந்த ஈர மணலின் மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் ஒட்டு விசையானது, உலர்ந்த மணலின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிகவும் வலிமையானதாகும்.
🐾 தண்ணீரும், மணலும் கலந்த கலவையின் மூலக்கூறுகளுக்கிடையே உண்டாகும் இத்தகைய வலிமையான ஒட்டு விசையின் காரணமாக ஈர மணற்பரப்பில் போதுமான கெட்டித்தன்மை ஏற்பட்டு அதன் மீது எளிதாக ஓடவும், நடக்கவும் முடிகிறது.
🐾 ஆனால் உலர்ந்த மணலின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையானது மணலின் துகள்களை ஒன்றோடொன்று இறுக்கமாக ஒட்ட வைப்பதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் மணற்பரப்பானது கெட்டித்தன்மை குறைந்து தளர்ச்சியாக இருக்கும்.
🐾 இந்நிலையில் யாரேனும் நடந்தால், உடல் அழுத்தம் காரணமாக அவரது கால்கள் உலர்மணலில் ஆழமாகப் பதிந்து, மணற்பரப்பில் எளிதாக நடக்க இயலாமல் போகிறது.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

🚄 மின்காந்த தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. இவற்றின் வழியே மின்சாரம் பாயும் போது மட்டுமே காந்தத்தன்மை பெறுகின்றன. மின்சாரத்தின் திசை மாறும் போது இதன் துருவங்களும் மாறுகின்றன.
🚄 தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றோடு ஒன்று விலகுவதால் இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுகின்றன.
🚄 காந்தத்தின் ஈர்ப்பு விசையையும், காந்தத்தின் விலக்கு விசையையும் பயன்படுத்தி காந்தப் பொருட்களை நகர்த்த முடியும் என உங்களுக்குத் தெரியுமல்லவா!
🚄 தண்டவாளத்தின் பக்கவாட்டிலும், தொடர்வண்டியின் கீழே பக்கவாட்டிலும் உள்ள காந்தங்களினால் இந்தத் தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது. மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
🚄 இத்தொடர்வண்டியில் சக்கரம் போன்ற அசையும் பொருட்கள் இல்லையென்பதால் உராய்வு விசை கிடையாது. அதனால் மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம்.
🚄 இவை மணிக்கு 600 கி.மீ வேகம் வரை கூட செல்லும் திறன் உடையவை. உராய்வு இல்லையென்பதால் இவை செல்லும் போது அதிக சத்தம் கேட்பதில்லை. குறைந்த மின்சாரமே போதுமானது. சுற்றுச்சூழலுக்கும் இவை உகந்தவை.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn