தண்ணீரில் இருக்கும் போது தோல் சுருங்குவது ஏன்?

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                தண்ணீரில் இருக்கும் போது தோல் சுருங்குவது ஏன்?

                தொட்டாற் சுருங்கி செடி தொட்டவுடன் இலைகள் சுருங்குவது எப்படி? 


🌿 தொட்டாற் சுருங்கியின் இலைகளும் மற்ற தாவரங்களின் இலைகளை போலவே பல செல்களின் ஒருங்கிணைப்பால் ஆனவைதான். ஒவ்வொரு செல்லும் சில திரவப் பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த திரவத்தின் அழுத்தம் காரணமாக செல்களும், அவற்றாலான இலையும் உறுதியாக நிமிர்ந்திருக்க முடிகிறது. 


🌿 இலையின் உயிரணுவிலிருந்து திரவம் வெளியேறி விட்டால், திரவ அழுத்தம் நீங்கி இலையின் உறுதித்தன்மை தளர்ந்துவிடும். புளிய மரம், வேலியோர முள் மரம், தூங்குமூஞ்சி மரம் போன்றவை இரவு நேரத்தில் சுருங்குவது இப்படித்தான்.


🌿 தொட்டாற் சுருங்கி இலையை தொடும் போது, அதன் தண்டு பகுதி ஒரு வகை அமிலத்தை சுரந்து இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மையை நீக்கி விடுகிறது. ஆனால் இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது.

தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?


👐 நாம் பொதுவாக துணிகளை நீரில் நனைத்தபின் அதில் சுருக்கம் இருப்பதை கண்டிருப்போம்.


👐 அந்த சுருக்கம் அயன் செய்யும் போது வெப்பம் கடத்தப்படுவதால் சுருக்கங்கள் குறைந்து சட்டை பொலிவு பெறும்.


👐 அதுபோல்தான் கையை நீரில் நனைக்கும் போது கையிலுள்ள நரம்பு நார்கள் சுருங்கி அதிலுள்ள வெப்பம் வெளியிடப்படும்.


👐 அவ்வாறு வெளியிடப்படுவதால் கைகள் ஈரமாக உள்ள போது சுருக்கமாக உள்ளன.


👐 ஈரம் சற்று வடிந்து கை சூடாக ஆரம்பிக்கும்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

ஈக்கள் அமரும் போது பின்னங்கால்களை வேகமாக தேய்த்து கொள்வது ஏன்?


🐝 ஈக்கள் அமர்ந்து கொண்டிருக்கும் போது பின்னங்கால்களை அல்ல, முன்னங்கால்களையே வேகமாக தேய்த்து கொள்ளும்.


🐝 காரணம் ஈக்களின் வாய் உறுப்புகளின் அமைப்புத் தன்மை திரவ நிலை அல்லது கூழ்ம நிலை உணவு பொருட்களை மட்டுமே எடுத்து கொள்ளும்படி தகவமைக்கப்பட்டிருக்கின்றது.


🐝 ஆகையால் சோற்று பருக்கையின் மீது ஈ உட்கார்ந்து, தன் முன்னிரு கால்களிலுள்ள நுண் உரோம நீட்சி உதவியால் உமிழ்நீரை எடுத்து பருக்கையின் மீது தடவி.... கரைத்து, கூழ்ம நிலைக்கு மாற்றும்.


🐝 அதன் பிறகு தான் வாய் உறுப்புகள் மூலம் எடுத்து கொள்ளும்.


🐝 இந்த செயலுக்குத்தான் முன்னிரு கால்களை அடிக்கடி தேய்த்து கொள்கிறது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)