மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?🤔 தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?🤔 தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

                நன்றாக கொதிக்கும் எண்ணெயில் ஒரு ஐஸ் கட்டியை போட்டால் என்னவாகும்?


☕ இது மிகவும் ஆபத்து, செய்து பார்க்க வேண்டாம். அறியாப் பருவ சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒரு யோசனை இது.


☕ கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் ஒரு துளி பட்டாலே கொப்பளித்து எகிறும், ஐஸ் கட்டி போட்டால் எண்ணெய் கொப்பளித்து எகிறும், வேதியியல் மாற்றத்தில் மொத்த எண்ணெயும், எண்ணெய் தெரித்த இடமும் தீ பற்றிவிடும்.


☕ இந்த நெருப்பினை, சாதாரணமாக ஒரு குவளை தண்ணீரில் அணைத்துவிட முடியாது. எண்ணெய் முழுவதும் எரிந்து முடியும் வரை தண்ணீரால் அணைக்கக்கூடாது. மணல் அல்லது தீயணைப்பு கருவியை பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?


💡 மின்மினிப் பூச்சிகள் (குசைநகடநைள) ஒளி உமிழ்வதை பார்த்திருப்பீர்கள். அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்!


💡 மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் உருவாக்குகின்றன. இதன் காரணமாக அவற்றின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகிறது. இதற்கு பெயர் உயிர் ஒளி உமிழும் தன்மை (டீழைடரஅiநௌஉநnஉந).


💡 லூசிஃபெரின் எனப்படும் கரிம மூலக்கூறுகள் லூசிஃபெரேஸ் எனப்படும் வினையூக்கிகளால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஒளிரக்கூடியவை. மின்மினியின் உடலில் உள்ள லூசிஃபெரேஸ் எனும் ஒளி உமிழும் நொதிப் பொருளின் முன்னிலையில் லூசிஃபெரின் மற்றும் கால்சியம், அடினோசைன், ட்ரை பாஸ்பேட் ஆகியவை ஆக்ஸிஜனுடன் இணைந்து வினைபுரியும்போது ஒளி உருவாகிறது. 


💡 ஒளி உருவாகத் தேவையான வேதிப் பொருட்களுடன் ஆக்ஸிஜனைச் சேர்ப்பதன் மூலம் மின்மினிப் பூச்சியானது, வேதி வினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது. இது பூச்சியின் ஒளி உறுப்பில் நிகழ்கிறது. ஆக்ஸிஜன் இருக்கும் போது ஒளி வெளிப்படுகிறது. அது இல்லாதபோது வெளிச்சம் மறைந்துவிடுகிறது.


💡 மின்மினிப்பூச்சிகளுக்கு நுரையீரல்கள் கிடையாது. அவை, உடலின் வெளிப் பகுதியில் இருந்து உட்புறச் செல்களுக்கு ட்ராக்கியோல்கள் எனப்படும் ஒருவிதமான தொடர் குழாய்கள் மூலம், ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கின்றன.


💡 மின்குமிழ்கள் (நுடநஉவசiஉ டீரடடிள - மின் பல்புகள்) ஒளிரும் போது அதிக அளவில் வெப்பம் வெளிப்படுகிறது. ஆனால், மின்மினியின் ஒளியானது குளிர்ந்த ஒளியாகும். இதன் ஒளியில் இருந்து வெப்ப வடிவில் ஆற்றல் வீணாவதில்லை.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)