மச்சத்தின் பலன்கள் பற்றிய தகவல்கள்

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                மச்சத்தின் பலன்கள் பற்றிய தகவல்கள்

                மச்சத்தின் பலன்கள்

🌟இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும், மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.


பெண்களுக்கான மச்சத்தின் பலன்கள் :


🌟நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அதிகாரம், ஆடம்பர வாழ்வு, செய்வதெல்லாம் வெற்றியாகும்.


🌟காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் சந்தோசம் அதிகரிக்கும்.


🌟காதுகளில் மச்சம் இருந்தால் பணம் அதிகரிக்கும். தனி மதிப்பும் இருக்கும்.


🌟நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் கலை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


🌟கழுத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.


🌟இடதுபக்க தோளில் மச்சம் இருந்தால் பரந்த மனம், தான தர்மம் செய்யும் குணம் இருக்கும்.


🌟உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் குடும்பம் இனிமையாக இருக்கும்.


ஆண்களுக்கான மச்சத்தின் பலன்கள் :


🌟புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பர்.


🌟நெற்றியின் வலது புறம் மச்சம் இருந்தால் தனயோகம் இருக்கும்.


🌟வலது புருவத்தில் மச்சம் இருந்தால் மனைவியால் யோகம் இருக்கும்.


🌟நெற்றியில் மச்சம் இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.


🌟வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்களால் உயர்வு உண்டாகும்.


🌟மூக்கின் மேல் மச்சம் இருந்தால் சுகபோக வாழ்க்கை உண்டாகும்.


🌟மூக்கின் வலதுபுறம் மச்சம் இருந்தால் நினைத்ததை அடையும் அம்சம் இருக்கும்.


🌟உதடுகளுக்கு மேல் மச்சம் இருந்தால் செல்வாக்கு, இசை மற்றும் கலைத்துறையில் நாட்டம் இருக்கும்.


🌟வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசீகரம், தயாள குணம் இருக்கும்.


🌟இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் ஏற்றத்தாழ்வு இருக்கும்.


🌟காதுகளின் உள்ளே மச்சம் இருந்தால் பேச்சாற்றல், திடீர் யோகம் உண்டாகும்.


🌟கழுத்தின் வலதுபுறம் மச்சம் இருந்தால் சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை உண்டாகும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)