எலுமிச்சை விளக்கு ஏற்றும் வழிமுறைகள்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                எலுமிச்சை விளக்கு ஏற்றும் வழிமுறைகள்..!

                எலுமிச்சை விளக்கு ஏற்றும் முறை


எலுமிச்சையாணது தீய ஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. விடியற்காலையில் சூரியன் உதயமவற்கு முன்பே பிரம்ம முகூர்த்தம் என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு ஏற்றி வழிப்பட்டால் எல்லா விதமான யோகத்தையும் பெறலாம்.


எலுமிச்சை விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டிய வழிமுறைகள் :


எலுமிச்சை பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.


பின்பு எலுமிச்சை பழத்தின் மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.


எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.


இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.


விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.


ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.


எலுமிச்சையின் மகிமை :


ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்ற பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவகனி என்பதால் ஆகும். மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.


எலுமிச்சை விளக்கு ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் :


ஞாயிறு மாலை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றினால் நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர் விரைவில் குணமாவார்கள்.


குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்தில் விளக்கேற்றலாம்.


தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)