உருத்திராட்சம் ஓர் அறிமுகம்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                உருத்திராட்சம் ஓர் அறிமுகம்..!

                உருத்திராட்சம் ஓர் அறிமுகம் 


உருத்திராட்சம் ஒருவகை மரங்களிலிருந்து பெறப்படும் மணிகளாகும். வடமொழியில் உருத்திராட்சம் என்பதற்கு ″ருத்திரனின் கண்கள்″ என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது.


உருத்திராட்சம் தோன்றிய வரலாறு :


ஒரு சமயம் தேவர்களுக்கு திரிபுரத்து அசுரர்கள் துன்பத்தை தந்து வந்தார்கள். இதனால் பெரும் துன்பத்துற்கு ஆளான தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். இதைக்கேட்டவுடன் சிவபெருமானின் மூன்று கண்களிலிருந்தும் நீர் வழிந்தது. அப்படி பொழிந்த நீரில் உருவானதே உருத்திராட்சமாகும். சிவனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஒரு மரமாய் உருவெடுத்துக் கனியாகிக் காய்த்துக் குலுங்கியது.


உருத்திராட்சம் பற்றிய தகவல்கள் :


உருத்திராட்ச மரங்கள் நேபாளத்திலும், ஜாவாத்தீவுகளிலும் அமோகமாக வளர்கின்றன. இமாலயத்திலும் உருத்திராட்ச கொட்டைகள் நிறைய விளைகின்றன. உருத்திராட்சம் நான்கு நிறங்களில் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் சிவப்பு நிற உருத்திராட்சங்கள் தான் அதிக அளவில் கிடைக்கின்றன. வெள்ளை நிற உருத்திராட்சம் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் விளைவதால் எளிதில் கிடைப்பதில்லை. மஞ்சள் நிற உருத்திராட்சங்களும் உண்டு. இவை அதிக அளவில் கிடைப்பதில்லை.

உருத்திராட்சத்தில் பல முகங்கள் கொண்ட உருத்திராட்சங்கள் உண்டு. ஒரு முகம் முதல் பதினாறு முகம் கொண்ட உருத்திராட்சங்கள் வரை உண்டு. இவைகளில் ஒரு முகம், ஐந்து முகம், பதினோரு முகம் கொண்டவை பூஜைக்கு ஏற்றவையாகும். ஒரு முகம் கொண்டது கிடைப்பது மிகவும் கடினம்.


பதினாறு வகையான முகங்கள் கொண்ட உருத்திராட்சங்களின் அதிதேவதைகள் :


1முகம் - சிவன்


2முகம் - அம்பிகை


3முகம் - அக்னி


4முகம் - பிரம்மா


5முகம் - காலாக்னி உருத்திரர்


6முகம் - சுப்பிரமணியர்


7முகம் - மன்மதன், ஆதிசேஷன்


8முகம் - விநாயகர்


9முகம் - பைரவர்


10முகம் - விஷ்ணு


11முகம் - ஏகதச உருத்திரர்


12முகம் - துவாதச உருத்திரர்


13முகம் - ஆறுமுகர்


14முகம் - அர்த்த நாரீஸ்வரர்


15முகம் - சதாசிவர்


16முகம் - ஆனந்தேஸ்வரர்


உருத்திராட்சத்தின் சிறப்புகள் :


உருத்திராட்சத்தின் அடிப்பாகம் விஷ்ணு என்றும், துவாரம் உருத்திரன் என்றும், மேற்புறம் பிரம்மா என்றும் கூறுவதுண்டு. உருத்திராட்சத்திற்கு கண்மணி, தெய்வமணி, புனித மணி, அக்க மணி, கடவுள் மணி, நாயகன் விழி மணி எனப் பல பெயர்கள் உண்டு.


நன்றாக விளைந்த உருத்திராட்சக்கொட்டைகளின் நடுவில் பழைய ஓட்டைக்காலனாவை வைத்தால் அது சுற்றும். அதிலுள்ள மின் சக்திதான் இதற்குக்காரணம். உருத்திராட்சம் இயற்கையிலேயே நடுவில் துளையைக்கொண்டது. எனவே இதை மாலையாகக் கோர்ப்பது மிகவும் எளிமையானது.


சிவனுடைய கண்களிலிருந்து தோன்றியதால் உருத்திராட்சம் சிவ சின்னங்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது. உருத்திராட்ச மாலையில் 108 அல்லது 54 அல்லது 27 உருத்திராட்சங்கள் இருக்கலாம். உருத்திராட்சத்தை தலை, காது, கை என உடலின் பல பாகங்களில் அணிந்துகொள்வதுண்டு. உருத்திராட்சத்தை அணிபவரின் பாவ வினைகளை ஈசன் போக்குவதாக பத்ம புராணம் கூறுகிறது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)