நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
மகம் நட்சத்திரம் பற்றிய தகவல்கள்..!
மகம் நட்சத்திரம்

27 நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவான். மகம் நட்சத்திரம் ஒரு பெண் நட்சத்திரமாகும். இது சிம்ம ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம, மி, மு, மெ, மா, மீ, மு ஆகியவைகளாகும்.
நட்சத்திரத்தின் பொது பலன்கள் :
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து செயல்களும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக கொண்டவராய் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தை மிகவும் ஆர்வமாக பேணிக்காப்பவர்களாக இருப்பார்கள். எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள்.
தங்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஒட ஒட விரட்டியடிக்காமல் ஒயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.
நட்சத்திரத்தின் திசை பலன்கள் :
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இது மொத்த 7 வருட காலங்கள் இருக்கும். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.
இரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடைபெறும். இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம்வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும்.
மூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும்.
நான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும்.
ஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாறாக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
வழிபாட்டு ஸ்தலங்கள் :
திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்.
திருவாலங்காடு கும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள வடாரண்யேசுவரர் திருக்கோவில்.
காஞ்சிபுரத்தின் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர் திருக்கோயில்.
அரியலூர் மாவட்டத்திற்கு தெற்கே 10 கி.மீ தொலைவில் ஆலந்துறை நாதராக அருந்தவநாயகியும் அருள் புரியும் திருக்கோயில்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn