நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
ராகு கேது பற்றி நாம் அறியாத சில தகவல்கள்..!
நவக்கிரகங்கள்...!!

நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களை குறிக்கிறது. கிரகம் எனும் சமஸ்கிருத சொல், தமிழில் ஆளுகைப்படுத்தல் ஆகும். நவக்கிரகங்கள் புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக கருதப்படுகின்றன. கிரகங்கள் மனிதர் மீதும், உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது ஜோதிட நம்பிக்கையாகும். புவி அண்டத்தின் மையத்தில் இருக்க, சூரியன் உட்பட்ட எல்லாக் கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன என்ற பழங்கால நம்பிக்கைக்கு ஏற்பவே ஜோதிடத்தில் கோள்களின் இயக்கங்கள் கணிக்கப்படுகின்றன. பண்டைய இந்தியப் பண்பாட்டில் இராகு, கேது தவிர்த்து ஏழு கோள்களும் தேவர்கள் எனவும், அவர்கள் வௌ;வேறு குண இயல்புகளைக் கொண்டவர்கள் எனவும் கருதினார்கள். இக்கோள்கள், அவரவர் குண இயல்புகளுக்கு ஏற்ப உலகுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் நன்மையும் தீமையும் செய்கிறார்கள் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.
நவகிரகங்களின் பெயர்கள் :
பெயர் தமிழ்ப்பெயர்சூரியன்திவாகரன்சந்திரன்சோமன்செவ்வாய்நிலமகன், சேய்புதன்கணக்கன், புலவன்குருசீலன், பொன்னன்சுக்கிரன்சுங்கன், கங்கன்சனி காரி, முதுமகன்ராகுகருநாகன்கேதுசெந்நாகன்
ஜோதிடப்படி இந்த ஒன்பது கிரகங்களும் கோள்களாக கருதப்படுகிறது. ஆனால், தற்கால அறிவியல் அடிப்படையில் இவைகளில் சில மட்டுமே கோள்களாகும். சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்). சந்திரன் பூமியின் துணைக்கோள். இராகு, கேது இரண்டும் விண் பொருட்கள் இல்லை. இவை நிழற் கோள்கள் எனப்படுகின்றன.
நவக்கிரக கோவில்கள் : சூரியனார் கோவில்
திங்கள+ர் கைலாசநாதர் கோவில்
சீர்காழி வைத்தீசுவரன் கோவில்
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோவில்
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில்
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில்
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில்
நவகிரகங்களை வழிபடும் முறைகள் :
நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது. முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
நவகிரகங்களை சாதாரணமாக ஒன்பது முறை சுற்றி வரவேண்டும் (அ) 'ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ" என்ற மந்திரத்தைச் சொல்லி ஒரு முறை வலம் வந்தால் போதும்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn