நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
சூரியன் பார்க்காத கிணறு... தியாகதுருகம் மலைக்கோட்டை...!!

💥 தியாகதுருகம் மலைக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சுமார் 65கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊரில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கிழக்கே சுமார் 13கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் 400 அடி உயரத்தில் இந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது.
சிறப்புகள் :
💥 குன்றின்மேல் அமைந்துள்ள இந்த தியாகதுருகம் மலைக்கோட்டையில் ஏறி நின்று பார்த்தால் ஊரின் அழகு தெரியும்படி 400 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
💥 கோட்டையின் மேற்குப்புறத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே அருகர் குகைக்கோவில் உள்ளது.
💥 மலைக்கோட்டையில் சூரியன் பார்க்காத வகையில் கிணறு ஒன்றுள்ளது.
💥 இந்தக் கோட்டையில் பல இடங்களில் பதுங்கு குழிகளும், தாமரைகுளமும் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

💥 இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், குதிரை மற்றும் யானை போன்ற விலங்குகளின் கொட்டில்கள் இன்றும் மறையாமல் உள்ளது.
💥 அக்காலத்தில் போரின் போது எதிரிகளை தாக்க பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் இன்னும் நினைவுச் சின்னங்களாக இங்கு காணப்படுகிறது.
பார்க்க வேண்டிய இடங்கள் :
💥 சூரியன் பார்க்காத கிணறு...
💥 தாமரைகுளம்...
💥 பழமையான தானியக்கிடங்குகள்...
💥 மலைக்குன்றுகள்...
💥 அருகர் குகைக்கோவில்...
💥 பதுங்கு குழிகள்...
💥 பழங்காலத்து போர் நினைவுச் சின்னங்கள்...
இதர சுற்றுலாத் தலங்கள் :
💥 கல்வராயன் மலை...
💥 செஞ்சி கோட்டை...
💥 ஆரோவில்...
💥 சேந்தமங்கலம் கோட்டை...
💥 திருவக்கரை தேசிய கல் மர பூங்கா...
💥 மயிலம் முருகன் கோவில்...
💥 மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில்...
எப்படி செல்வது?
🚌 தியாகதுருகம் மலைக்கோட்டை செல்ல கள்ளக்குறிச்சியில் இருந்தும், விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP