நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
பசுமையான சூழலில்.. வெள்ளி மலை...!

⛰ விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ 123கி.மீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து ஏறத்தாழ 44கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பசுமையான இடம் தான் வெள்ளி மலை.
சிறப்புகள் :
⛰ ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்கள் போலவே பசுமையான சூழலில் இந்த வெள்ளி மலை அமைந்துள்ளது.
⛰ இந்த மலை சாலையில் பயணம் செய்யும் போது ஒரு திகில் அனுபவமாக இருக்கும். வளைந்து வளைந்துச் செல்வதால் நமக்கு கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் வெள்ளி மலையின் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே இந்த திகில் பயணத்தை மேற்கொள்ளலாம்.
⛰ மலைக்குன்றுகளில் சிறந்து விளங்கும் இடமாக வெள்ளி மலை விளங்குகிறது. இங்கு உள்ள மக்கள் தேன் எடுத்தல், ஆடு, மாடு வளர்ப்பதைத் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.

⛰ இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் பெரியார் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அங்கு பறவைகளின் சப்தமும், அருவியின் ஓசையும் இல்லாமல் அந்த இடம் அமைதியாக நம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் விதத்தில் அமைந்திருக்கும்.
⛰ மலையின் முகடுகளில் இருந்து ஆர்ப்பரித்து விழும் மூலிகைத் தண்ணீரில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
⛰ சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் கரியாலூர் ஏரி படகு சவாரியும், சிறுவர்கள் விளையாடுவதற்கு உபகரணங்கள் அமைந்துள்ளன.
⛰ குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகவும் இந்த மலை அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
கள்ளக்குறிச்சியிலிருந்து வெள்ளிமலைக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கள்ளக்குறிச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
⛰ செஞ்சிக்கோட்டை.
⛰ கல்வராயன்மலை.
⛰ மரக்காணம் கடற்கரை.
⛰ செஞ்சி மதிற்சுவர்.
⛰ 24 தீர்த்தங்கரர்கள்.

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP