நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும்.. கோவளம் கடற்கரை..!

🌟 சென்னையிலிருந்து ஏறத்தாழ 38கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து ஏறத்தாழ 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம் தான் கோவளம் கடற்கரை.
சிறப்புகள் :
🌟 இந்தக் கடற்கரையில் அமைதியான காற்று, மிளிரும் கடற்கரை மணல், வண்ணமயமாக காட்சியளிக்கும் சிற்பிகள் மற்றும் பனை மரங்கள் என ரம்மியமான சூழ்நிலையில் நம் மனதை ஈர்க்கும் இடங்களாக கோவளம் கடற்கரை அமைந்துள்ளது.
🌟 இங்கு சென்றால் பாறைகள் அலைகளின் மீது மோதும் காட்சிகளையும், மணல்கள் நிறைந்த நீண்ட கடற்கரையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
🌟 இவை மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். இந்த கடற்கரை வளைவான தோற்றத்தை கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.
🌟 கோவளம் கடற்கரையில் நீர் சாகச விளையாட்டுகள், நீச்சல், படகு சவாரி செய்தல் உள்ளிட்டவைகள் இருக்கின்றன. இளைஞர்களை கவரும் இடமாக இந்த கடற்கரை திகழ்கின்றது.
🌟 இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் திறந்த வெளி அருங்காட்சியகம் உள்ளது. தென்மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பற்றி அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

🌟 அருங்காட்சியகத்தின் அருகில் ஒரு பூங்கா அமைந்துள்ளது. அப்பூங்காவில் சிறுவர்கள் ஆடிப்பாடி விளையாடுவதற்கு கேளிக்கை விளையாட்டுகள் அமைந்துள்ளன.
🌟 கண்ணை கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்த அழகிய கடற்கரையில் கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காட்சிகளைப் பார்க்கலாம்.
🌟 சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக கோவளம் கடற்கரை திகழ்கிறது.
எப்படி செல்வது?
🌟 சென்னைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
🌟 அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
🌟 சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP