நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
ஆசிய தடகள ராணி...!!
🏃♀️ இந்தியாவின் தங்க மங்கை...!!
🏃♀️ இந்திய தடகளங்களின் அரசி...!!
🏃♀️ பய்யோலி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் அதிவேக ஓட்ட மங்கை...!!
🏃♀️ தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்...!!
🏃♀️ ஆசியப் போட்டிகளில் 5 தங்கப்பதக்கம் வென்றவர்...!!
🏃♀️ இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம்...!!
🏃♀️ உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக விளங்கியவர்.
🏃♀️ சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்...!!
🏃♀️ ஓடும் ரயில்களை சக போட்டியாளராக கருதி ஓட்டப்பயிற்சி எடுத்தவர்...!!
🏃♀️ விளையாட்டுத்துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர்.
🏃♀️ வென்றவர் நினைவில் நிற்பார், தோற்றவர் மறக்கப்படுவார். இதுதான் விளையாட்டு உலகின் அழிக்க முடியாத விதி. ஆனால் இதில் விதிவிலக்காக திகழ்ந்தவர் இந்தியாவின் தங்க மங்கை...!!
🏃♀️ தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 103 பதக்கங்களை குவித்து தனிப்பெரும் சாதனைக்கு உரியவராக இன்றுவரை திகழ்கிறார்.
அவர்தான்
இந்தியாவின் தங்க மங்கை
👇👇
பி.டி.உஷா🏃♀️
🏃♀️ தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத்துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
🏃♀️ தடகள விளையாட்டில் புயல் வேகத் திறமையினை வளர்த்துக்கொண்டு வந்த இவர், முதன் முதலாக 1977ஆம் ஆண்டு தன்னுடைய 13 வயதில் தேசிய அளவிலான தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, தன்னுடைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார். பிறகு, தொடர்ந்து பல தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றதோடு மட்டுமல்லாமல், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
🏃♀️ இந்திய தடகளத்தின் முடிசூடா ராணி யார்? என்றால், எந்தவித சந்தேகமும் இல்லாமல் அனைவரும் கூறும் ஒரு பெயர் பி.டி.உஷா தான்.
🏃♀️ விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, உஷா ஸ்கூல் ஆஃப் அத்லடிக்ஸ் என்ற பெயரில் அகாடமி தொடங்கி புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் தொடர்ந்து இந்திய தடகளத்திற்கு தனது சேவையினை அளித்து வருகிறார்.
🏃♀️ பி.டி.உஷா என்று அறியப்படும் 'பிலாவுல்லக்கண்டி தேக்கேபரம்பில் உஷா (Pilavullakandi Thekkeparambil Usha)" அவர்கள், 1964ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள 'பய்யோலி" என்ற இடத்தில் பைத்தல், இலட்சுமி என்ற தம்பதியருக்கு ஆறு குழந்தைகளில் உஷா இரண்டாவது மகளாக பிறந்தார்.
🏃♀️ இவர் பய்யோலி என்ற இடத்தில் பிறந்ததால்தான் பின்னாளில் இவருக்கு பய்யோலி எக்ஸ்பிரஸ் என்ற பட்டப்பெயர் வந்தது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
🏃♀️ பி.டி.உஷா தனது ஆரம்பகால கல்வியை த்ரிக்கோட்டூர் பள்ளியில் துவங்கினார். இவர் சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். தன்னுடைய பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வார்.
🏃♀️ நான்காம் வகுப்பு படித்தபோது பி.டி.உஷாவை, அதே பள்ளியில் படித்த மாவட்ட சாம்பியனுடன் போட்டியிட வைத்தார் அவரது உடற்பயிற்சி ஆசிரியர். இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்று, தடகளத்தில் தனக்கான பாதையை உருவாக்க தொடங்கினார் உஷா. அடுத்த சில ஆண்டுகள், மாவட்ட தடகள போட்டிகளில் உஷாவை தோற்கடிக்க ஆளே இல்லை.
🏃♀️ அந்த நேரத்தில்தான் கேரளா மாநில அரசு, கண்ணூரில் பெண்களுக்கான விளையாட்டு பள்ளியை தொடங்கியது. ஆரம்பக்கல்வியை முடித்த உஷா கண்ணூரில் உள்ள விளையாட்டு பிரிவு பள்ளியில் சேர்ந்தார். பி.டி.உஷாவின் முதல் பயிற்சியாளராக நம்பியார் இருந்தார். உஷாவை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக்க அவர் கடுமையாக உழைத்தார்.
🏃♀️ சாதாரணமாக சென்று கொண்டிருந்த உஷாவின் தடகள வாழ்க்கை, நம்பியார் என்பவரால் அடுத்த தளத்திற்கு சென்றது. உஷாவிடம் இருக்கும் திறமையை கண்டுகொண்ட அவர், தடகள போட்டிகளுக்காகவே அவரை வடிவமைக்க தொடங்கினார்.
🏃♀️ மைதானம் மட்டும் அல்லாது, சில நேரம் ஓடும் ரயில்களை சக போட்டியாளராக கருதி ஓட்டப்பயிற்சி எடுத்துள்ளார் உஷா. 1978-79 காலக்கட்டத்தில் ஒரு பெண் ஓடுவதை பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர். உஷா பயிற்சி செய்வதை பார்ப்பதற்காகவே பலரும் வந்தனர்.
🏃♀️ முதலில் தங்களுடைய பெண்ணுக்கு தடகளம் சரியாக இருக்குமா? என தயங்கிய உஷாவின் பெற்றோர், பின்னர் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கினர். உஷா அதிகாலை ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும்போது, நாய் தொல்லை அதிகமாக இருக்குமாம். இதற்காகவே அவருடைய அப்பா தினந்தோறும் ஒரு குச்சியோடு மைதானத்திற்கு வந்து அமர்ந்திருப்பாராம்.
தேசிய அளவில் அவரின் சாதனைகள் :
🏃♀️ தடகள விளையாட்டில் புயல் வேகத் திறமையினை வளர்த்து கொண்டு வந்த அவர், முதன் முதலாக 1977ஆம் ஆண்டு தன்னுடைய 13-வது வயதில் தேசிய அளவிலான தடகள விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு, தன்னுடைய முதல் தேசிய சாதனையைப் படைத்தார். பிறகு, தொடர்ந்து பல தேசிய போட்டிகளில் பங்கேற்று கவனம் ஈர்த்த உஷாவின் கவனம் சர்வதேச போட்டிகளின் பக்கம் திரும்பியது.
சர்வதேச அளவில் அவரின் சாதனைகள் :
🏃♀️ தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், பலருடைய பாராட்டுகளையும் வென்ற அவர், பின்னர் சர்வதேச அளவில் கால் பதிக்கத் தயாரானார். 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக சர்வதேச அளவில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் பங்கேற்று, பதக்க வாய்ப்பை இழந்தாலும், அதன் பிறகு 1982ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுவே அவருடைய முதல் சர்வதேச பதக்கமாகும்.
🏃♀️ குவைத்தில் நடைபெற்ற சாம்பியன் தடகள போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனையை தொடர்ந்தார். ஆனால் 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியில் 100ல் ஒரு நொடி வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்டார். ஆயினும் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை உஷாவிற்கு கிடைத்தது.
🏃♀️ ஒலிம்பிக் போட்டியின் அரை இறுதியில் உஷாவின் ஓட்டத்திறனை பார்த்த பலரும், கண்டிப்பாக தங்கம் வெல்லும் வாய்ப்பு உஷாவுக்கு உள்ளது என கணித்திருந்தனர். ஆனால் இறுதி போட்டியில் நடந்த சில எதிர்பார்க்காத சம்பவங்கள், உஷா மட்டுமல்லாது பல லட்சம் இந்தியர்களின் மனதையும் நொறுங்கச் செய்தது.
🏃♀️ இதையடுத்து 1986ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்திலும் பங்கேற்று தங்கப் பதக்கங்களை பெற்றார். இதை பாராட்டி மத்திய அரசு இவருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கியது. ஆசிய போட்டிகளில் கொடிக்கட்டிப் பறந்த பி.டி.உஷாவிற்கு ஆசிய தடகள ராணி என்ற பட்டமும் கிடைத்தது. மேலும் இந்தியாவின் தங்க மங்கை, பய்யோலி எக்ஸ்பிரஸ் என பல்வேறு பட்டப்பெயர்களால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் பி.டி. உஷா. கடந்த 1983 முதல் 1989 வரை பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று விளையாடிய உஷா, 13 தங்க பதக்கங்களை குவித்தார்.
🏃♀️ ஒலிம்பிக் தோல்விக்கு பிறகு கலந்து கொண்ட அடுத்த சில போட்டிகளில் உஷாவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. பல விமர்சனங்களுக்கு உள்ளானார் உஷா. ஆனால், தன்னால் மீண்டெழ முடியும் என்பதில் மட்டும் உஷா உறுதியாக இருந்தார்.
🏃♀️ 1989ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 'ஆசிய சாம்பியன்ஷிப்" போட்டியில் கலந்துகொண்ட உஷா, 4 தங்கம், 2 வெள்ளிப்பதக்கங்களை வென்று மீண்டும் முத்திரை பதித்தார்.
🏃♀️ அந்த போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம் வென்றது. அதில் நான்கு பதக்கம் நான் வென்றது. பதக்கம் பெறும் போது ஒலிக்கும் இந்திய தேசிய கீதத்தை கேட்கும் போதெல்லாம், என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்துவிட்டேன் என்ற திருப்தி கிடைத்தது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது என்றும்,
🏃♀️ அதிக தோல்விகளை நான் கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம், 'எனக்கான ஒரு பதக்கமும், வெற்றியும் பறிபோய்விட்டதே" என ஒருபோதும் நினைத்ததில்லை. 'இந்தியாவுக்கான வெற்றி பறிபோய்விட்டதே" என்றுதான் ஆதங்கம் கொள்வேன். பின்னர் தோல்விக்கான காரணம் மற்றும் என் தவறுகளை உணர்ந்து, தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளையும் பெற்றிருக்கிறேன். என் உழைப்புக்கு உண்மையான பலன் கிடைத்தது என்று கூறினார் உஷா.
🏃♀️ சுமார் 28 வயதுவரை விளையாட்டு மட்டுமே வாழ்க்கைத்துணை என்று பயணித்து, சர்வதேச தடகள அரங்கில் தன் பெயரை நிலைநாட்டிய உஷா, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தார். 1991ஆம் ஆண்டு சீனிவாசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
திருமணத்திற்குப் பிறகு :
🏃♀️ திருமணத்திற்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தடகள அரங்கிலிருந்து தற்காலிக ஓய்வை எடுத்தார் உஷா. ஆனால், உஷாவின் கணவரும், கபடி வீரருமான சீPனிவாசன் அளித்த ஊக்கத்தினால் குழந்தை பேறுக்கு பிறகு மீண்டும் தடகள அரங்கில் நுழைந்தார். மீண்டும் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.
🏃♀️ 1998ஆம் ஆண்டு ஜப்பானில் ட்ராக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். உஷா இப்போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை செய்து தனக்குள் இருந்த தடகள திறமையை வெளிப்படுத்தினார். ஆசியப் போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி.டி.உஷா அவர்கள், அதுவரை அவர் பங்கேற்ற சர்வதேச போட்டிகள் மூலம் சுமார் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.
உஷா தடகள பள்ளி :
🏃♀️ உஷா தடகள பள்ளியானது, தடகளத்தில் எதிர்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற உஷா தொடங்கிய திட்டமாகும்.
🏃♀️ உஷா, ரூ.20 கோடி செலவில் இப்பள்ளியை தொடங்கினார். இத்திட்டத்திற்காக கேரள அரசு உஷாவுக்கு 30 ஏக்கர் நிலமும், ரூ.15 லட்சமும் வழங்கியது.
பி.டி.உஷா பெற்றுள்ள முக்கிய விருதுகள் :
🏅 1983ஆம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜுனா விருது.
🏅 1984ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது.
🏅 1985ஆம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய தடகள மீட் மூலம் சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருது.
🏅 1984, 1985, 1986, 1987 மற்றும் 1989ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசியா விருது.
🏅 1986ஆம் ஆண்டு சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது.
🏅 1999ஆம் ஆண்டு கேரள விளையாட்டு பத்திரிக்கையாளர் விருது.
🏅 கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் 2018ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
உஷாவின் பேச்சுக்களில் அதிகம் இடம்பெறும் தன்னம்பிக்கை வரிகள்...!!
🏃♀️ தோல்வியை பெறாமல், பெரிய வெற்றிகளை ஒருபோதும் அறுவடை செய்யவே முடியாது.
🏃♀️ வெற்றிக்கு இடைப்பட்ட காலங்களில் நிச்சயம் வலியும், புறக்கணிப்பும் இருக்கத்தான் செய்யும். அந்தத் தடைகளை தாண்டி வந்தால்தான், வெற்றிக்கோட்டை அடைய முடியும்.
🏃♀️ அதற்கு உழைப்பும், விடாமுயற்சியும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நிச்சயம் தேவை. அப்படித்தான் முன்பு நாட்டுக்காக ஓடினேன். இப்போது என் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க ஓடுகிறேன். என் அனுபவத்தில் ஒரு விஷயத்தை மட்டும் அடிக்கடி சொல்வேன். உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது. என் ஓட்டமும், நிற்காது.
உஷாவின் நிறைவேறாத ஒலிம்பிக் கனவு :
🏃♀️ நூற்றுக்கணக்கில் பதக்கங்களை குவித்திருந்தாலும், நூலிழையில் தவறிவிட்ட ஒலிம்பிக் பதக்கம் உஷாவின் மனதில் நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது.
🏃♀️ தன்னால் ஒலிம்பிக்கில் வெல்ல முடியாவிட்டாலும், தன் பயிற்சி மையம் மூலமாவது இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் பெற வேண்டும் என தொடங்கப்பட்டதுதான் உஷா தடகள பள்ளி.
🏃♀️ லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தோற்றதும், பயிற்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் லண்டன் செல்வேன். அங்கு தடகளத்திற்காக இருக்கும் வசதிகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். நான் எப்போது தடகள பயிற்சிப்பள்ளியை தொடங்கினாலும், இப்படிப்பட்ட வசதிகளை கொண்டுவர வேண்டும் என்பது என் மனதில் இருந்து வந்தது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் உஷா தடகள பள்ளி என்று பெருமிதம் கொள்கிறார் உஷா.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP