நாமக்கல் மலைக்கோட்டை...!!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                நாமக்கல் மலைக்கோட்டை...!!

                நாமக்கல் மலைக்கோட்டை


நாமக்கல் மலைக்கோட்டை, நாமக்கல்லில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இந்தக்கோட்டை 246 அடி உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. இவை இரண்டும் இந்நகரின் பிரபல சுற்றுலா தலங்களாக உள்ளன. தற்சமயம் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


கோட்டை வரலாறு :


அனுமான் இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது கமலாலயம் குளத்தினருகில் இறக்கிவைத்த விஷ்ணுவின் உருவமிட்ட சாலிகிராமம் என்னும் கல், அனுமான் ஸ்தானம் முடித்து வரும்போது நாமகிரி மலையாய் உருவெடுத்ததாக வரலாறு உண்டு.


இக்கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. மேலும், இதை கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா என்ற கருத்தும் நிலவுகிறது.


திப்பு சுல்தான் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார்.


கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை புகழ் பெற்றன. மிகப்பெரிய ஒற்றை பாறையின் மலை உச்சியில் இந்த கோட்டை அமைந்துள்ளது.


மலையை செதுக்கி குடைவரை கோவில்கள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள நரசிம்மர் கோயிலும், அரங்கநாதர் கோயிலும் மலையை குடைந்து செய்யப்பட்டவையாகும். மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும், மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. 


இக்கோயில்கள் கிபி 784 இல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயில்களின் மண்டபங்களும், பிற கோயில்களும் பின்னால் கட்டப்பட்டதாகும். நரசிம்மர் கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.


மலைக்கோட்டை சிறப்புகள் :


246 அடி உயரத்தில் உள்ளது நாமக்கல் மலை கோட்டை. இதன் சுற்றளவு ஒன்றரை ஏக்கர். இக்கோட்டை பல இடிபாடுகளை சுமந்து நிற்கிறது. இதுவே கட்டப்பட்ட காலத்திலிருந்து அதை கைப்பற்ற நடந்த போர்களையும், போராட்டங்களையும் காட்டுகிறது. 


கோட்டையின் வாயில் கதவின் அருகில் ஒரு யாழியின் உருவம் வெளிசுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய கோட்டை கொத்தளமும், அதன் உள் சுற்று பிரகாரமும் இருக்கிறது. 


உள்ளே ஒரு பாசி படிந்த குளம் உள்ளது. சிறு நுழைவாயிலை கொண்ட பெரிய கற்சுவற்றையுடைய ஆயுத கிடங்கும் இருக்கிறது. கோட்டையிலுள்ள கர்ப்பகிரகத்தில் சிலையற்று ஒரு கோவிலும் உள்ளே இருக்கிறது.


நாமக்கல்லின் மலைக்கோட்டையில் இருந்து பார்த்தால் வண்ண வண்ண வீடுகளைச் சுமந்து நாமக்கல் நகரம் அழகாய் காட்சியளிக்கிறது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)