வெற்றியை தரும் விஜயதசமி நன்னாளில்.. இதையெல்லாம் செய்தால் மிகச்சிறப்பு..!!

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                வெற்றியை தரும் விஜயதசமி நன்னாளில்.. இதையெல்லாம் செய்தால் மிகச்சிறப்பு..!!

                விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்தவொரு காரியமும் வெற்றியளிக்கும் என்பது நம்பிக்கை.


வித்யாரம்பம் :


📙 ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை கல்வி கற்க துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவது இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள் தான் விஜயதசமி.


📙 விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஓவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்று கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள்.


📙 விஜயதசமி நாளில் 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது.


📙 இந்நிகழ்ச்சியை கோவில்களிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோவில்களில் செய்யும் போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். வீட்டில் செய்யும் போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம்.


📙 குழந்தையை வீட்டில் அப்பா, தாத்தா அல்லது தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்து கொள்ள வேண்டும். ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும். குரு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைப்பார்.


📙 குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.


விஜயதசமியன்று என்னென்ன தொடங்கலாம்?


🙏 வித்யாரம்பம் செய்தல்


🙏 புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல்


🙏 புதிய தொழில் ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல்


🙏 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது


🙏 நடனம், சங்கீதம் போன்ற கலைகளை கற்க ஆரம்பித்தல்


🙏 இதுபோன்ற செயல்களை விஜயதசமி அன்று ஆரம்பித்தால் வெற்றியும், புகழும் கிடைக்கும்.


முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்கள், இசைக்கருவிகள் மற்றும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளை விஜயதசமி பூஜை முடிந்து உபயோகம் செய்வது சிறப்பு.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)