நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
சிவனின் சிறப்பு அவதாரங்கள்..!
சிவபெருமானின் அவதாரங்கள்

விஷ்ணுவின் 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சிவபெருமானின் அவதாரங்கள் பற்றி நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள் வேண்டுமென்றே பூமியில் மனிதனாக அவதரிப்பது ஆகும். மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிக்கவே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். அவ்வாறு சிவபெருமான் பூமியில் 19 அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த 19 அவதாரங்களுக்கும் குறிப்பிட்ட காரணங்களை கொண்டுள்ளது. அதன் அதிகபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனை காப்பது ஆகும்.
1. பிப்லாட் அவதாரம் - மக்களை பிடிக்கும் சனி தோஷத்தை நீக்க.
2. நந்தி அவதாரம் - மந்தைகளில் உள்ள உயிரினங்களை காக்க.
3 வீரபத்திர அவதாரம் - சிவபெருமானின் கடுமையான அவதாரம்.
4. பைரவ அவதாரம் - பிரம்மாவின் ஆனவத்தை அடக்க.
5. அஸ்வத்ஹமா அவதாரம் - எதிர்த்து நின்ற சத்ரியர்களை அழிக்க.
6. ஷரபா அவதாரம் - விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க.
7. க்ரஹபதி அவதாரம் - கடவுளின் பெருமையை உலகிற்கு உணர்த்த.
8. துர்வாசா அவதாரம் - உலகத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க.
9. அனுமன் அவதாரம் - ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிய.
10. ரிஷப அவதாரம் - விஷ்ணு பகவானின் கொடிய மகன்களையும் கொல்ல.
11. யாதிநாத் அவதாரம் - பக்தர்களை சோதிக்க.
12. கிருஷ்ண தர்ஷன் அவதாரம் - யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்த.
13. பிக்ஷஷுவர்யா அவதாரம் - ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக்க.
14. சுரேஷ்வர் அவதாரம் - பக்தர்களை சோதிக்க.
15. கீரத் அவதாரம் - அர்ஜுனனுக்கு வரம் அளிக்க.
16. சுண்டன்டர்கா அவதாரம் - பார்வதி தேவியின் கரம் பிடிக்க.
17. பிரமச்சாரி அவதாரம் - சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க.
18. யக்சேஷ்வர் அவதாரம் - கடவுள்களின் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத்தை ஒழிக்க.
19. அவதுட் அவதாரம் - இந்திரனின் இறுமாப்பை அழிக்க.
தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn