ராகு கேது தோஷம் பற்றிய தகவல்கள்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                ராகு கேது தோஷம் பற்றிய தகவல்கள்..!

                ராகு கேது தோஷம் 


ராகு கேது தோஷம் என்பது என்னவென்றால் ஒருவரது ஜாதக கட்டத்தில் லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது (அ) லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு இருந்தால் அது ராகு கேது தோஷமாகும். அதேபோல், 2இல் ராகு, 8இல் கேது (அ) 8இல் ராகு, 2இல் கேது இருந்தால் அது ராகு கேது தோஷமாகும்.


ராகு கேது தோஷத்தால் திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் உருவாக்கும்.


ராகு கேது பரிகார ஸ்தலங்கள் :


கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். 


நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்களம் பரிகார ஸ்தலமாகும்.


சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்.


திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்தலம்.


பரிகாரங்கள் :


கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.


ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.


காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.


புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.


நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.


சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும்.


பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகுகாலத்திலும் வணங்குவது நல்லது.


சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும்.


தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.


ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடவும்.


ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும்.


பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.


பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.


ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.


வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடவும். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும்.


அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடவும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)