கேட்டை நட்சத்திரம் பற்றிய தகவல்கள்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                கேட்டை நட்சத்திரம் பற்றிய தகவல்கள்..!

                கேட்டை நட்சத்திரம்..!!


27நட்சத்திரங்களில் 18வது இடத்தை பெறுவது கேட்டை நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் நே, ய, இ, யூ, நே, கை ஆகியவை ஆகும்.


நட்சத்திரத்தின் பொது பலன்கள் :


கேட்டையில் பிறந்தால் கோட்டையில் வாழலாம் என்ற பழமொழியும், கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும் என்ற பழமொழியும் உண்டு. இது அவரவர் விதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும். கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்கள் செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு, நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும். நீர் நிலைகளில் குளிப்பதில் அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பதில் அதிக விருப்பமும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும், பின்பு விவேகமுள்ளவர்களாக மாறுவார்கள். செய்த நன்றியை மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமாதானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணுறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர்களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது சாஸ்திர விதியாகும்.


நட்சத்திரத்தின் திசை பலன்கள் :


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் மொத்தம் 17 வருடங்கள் வருகிறது. இதில் புதன் பலம் பெற்றிருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலமிழந்திருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும். 


இரண்டாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும். 


மூன்றாவதாக வரும் சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும். 


நான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும் ஐந்தாவதாக வரும் சந்திர திசை 10 வருடமும் நடைபெறும். இத்திசைகளின் காலங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும்.


வழிபாட்டு ஸ்தலங்கள் :


அருள்மிகு வரதராஜப் பொருமாள் திருக்கோவில்.


அருள்மிகு உத்தமர் திருக்கோவில்.


திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்.


திருக்கச்சூர் மருந்தீசர் கோவில்.


பொருந்தாத நட்சத்திரங்கள் : 


அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)