திருமணம் தடை ஏற்பட காரணங்கள் என்ன?

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                திருமணம் தடை ஏற்பட காரணங்கள் என்ன?

                திருமணம் தடை ஏற்பட காரணங்கள்


திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று நம் பெரியோர்கள் சொல்வர்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வயது ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவசியம். ஆனால் ஒரு சில நபருக்கு திருமணம் செய்ய தாமதம் ஆகிறது. அதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது அது பற்றி இங்கே பார்ப்போம்.


திருமணம் தடை ஏற்பட காரணங்கள் :


பூர்வ ஜென்ம தோஷம்:


பூர்வ ஜென்மத்தில் நாம் அறியமால் சிறு பாவங்கள் செய்திருப்போம். அந்த தோஷத்தினால் திருமணம் தடை உண்டாகும்.


முன்னோர்கள் செய்த பாவம்:


ஒருவருக்கு திருமணம் தடை பெற பாவம் செய்திருத்தல். நம் முன்னோர்கள் செய்த பாவத்தினால் திருமணம் நிகழ தாமதமாகும்.


குலதெய்வ குறைபாடு:


நாம் நினைத்தை நிறைவேற்றிய இறைவனுக்கு நாம் வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்திருப்போம். அவ்வாறு இருந்தால் திருமணம் தடை ஏற்படும்.


ஜாதக கிரக தோஷம்:


ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்கங்களால் திருமணம் தடை ஏற்படும்.


ருது தோஷம்:


ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும்.


திருமண தடை நீங்க பரிகாரங்கள்:


அவர்களின் ஜாதகம் எந்த திசையில் நடைபெறுகிறது என்பதை அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும்.


சூரிய மஹாதிசை - ஞாயிற்றுக்கிழமை


சந்திரமஹாதிசை - திங்கட்கிழமை


செவ்வாய் மஹாதிசை - செவ்வாய்க்கிழமை


புதன் மஹாதிசை - புதன்கிழமை


வியாழ(குரு)மஹாதிசை - வியாழக்கிழமை


சுக்கிரமஹாதிசை - வெள்ளிக்கிழமை


சனிமஹாதிசை - சனிக்கிழமை


ராகு மஹாதிசை - வெள்ளிக்கிழமை


கேது மஹாதிசை - வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் பைரவரை வழிபட தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.


குறிப்பு :


இந்த வழிபாடு செய்ய விரும்புவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதையும், மது அருந்துவதையும் கைவிட வேண்டும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)