நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய http://bit.ly/2FEzHdP
இயற்கை எழில்மிகுந்த.. தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி..!

🏞 பழனியிலிருந்து ஏறத்தாழ 16கி.மீ தொலைவிலும், திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ 70கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்கை எழில்மிகுந்த இடம்தான் தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி.
சிறப்புகள் :
🏞 தேக்கந்தோட்டம் கிராமத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த அழகிய நீர்வீழ்ச்சியை காண்பதற்கு மலைகளின் மீது ஏறித் தான் செல்ல வேண்டும்.
🏞 அவ்வாறு செல்லும் போது மலைகளில் உள்ள இயற்கை காட்சிகள், மரங்கள், செடிகள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். மலையில் பயணம் செய்யும்போது நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செல்லலாம்.
🏞 பிறகு, இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் வரதமனதி அணை அமைந்துள்ளது. வரதமனதி அணை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான சுற்றுலாத்தலமாகவும் இந்த இடம் விளங்குகிறது.

🏞 இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரை குழாய் மூலம் பழனி மலையில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியில் தேக்கப்படுகின்றன. இந்த தொட்டியை நீர்தேக்கத் தொட்டி என்று அழைக்கிறார்கள்.
எப்படி செல்வது?
பழனியிலிருந்து தேக்கந்தோட்டம் கிராமத்திற்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
பழனியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
🏞 சரவண பொய்கை.
🏞 பழனி தண்டாயுதபாணி ஆலயம்.
🏞 இடும்பன் ஆலயம்.

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் http://bit.ly/2FEzHdP