வாஸ்து சாஸ்திரம்..!!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                வாஸ்து சாஸ்திரம்..!!

                வாஸ்து சாஸ்திரம்...!!


ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. வீட்டை ஆழகாக வடிவமைத்து கட்டினாலும் அறைகள் எந்த திசையில், எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரம் விதிமுறைகள் வகுத்துள்ளது.


வாஸ்து சாஸ்திர விதி முறைகள்:


வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் பிரச்சனை எதுவும் இல்லை. வீட்டுமனைகள் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.


ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் ஃ கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் ஃ கனமாகவும் இருத்தல் அவசியம்.


மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலையை மேடாக அமைக்க வேண்டும்.


ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.


வீட்டு கட்டுமான பணிக்கு கொண்டு வரப்படும் ஜல்லிக்கற்கள், செங்கல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தெற்கு, மேற்கு திசைகளில் குவித்து வைக்க வேண்டும்.


பூமி பூஜை செய்து அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கு திசையான ஈசான மூலையில் இருந்து பணியை தொடங்க வேண்டும்.


தென்கிழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது.


படுக்கை அறையை தென்மேற்கு பகுதியில் அமைக்கலாம்.


வீடு கட்டுமான பணிக்கு ஆழ்துளைகிணறு தோண்டுவதாக இருந்தால் ஈசானிய திசையில் பணியை மேற்கொள்ள வேண்டும்.அல்லது சிறிய பள்ளம் தோண்டி தண்ணீரை தேக்கி வைப்பதாக இருந்தாலும் ஈசானிய மூலையிலேயே நீரை தேக்கி கட்டுமான பணிக்கு பயன்படுத்த வேண்டும்.


வாஸ்து பிரச்சனை தீர சொல்ல வேண்டிய மந்திரம் : 


உங்கள் வீட்டில் வாஸ்துசாஸ்திர அமைப்பின் படி குறைகள் இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க எல்லா பிரச்சனைகளும் நீங்கி நலமுண்டாகும்.


'ஓம் வாஸ்து புருஷாய நம

ஓம் ரத்தலோசனாய நம

ஓம் க்ருஷ்யாங்காய நம

ஓம் மஹா காயாய நம"

சந்திரன் தோஷம் நீங்க..!

திருந்துதேவங்குடி எனப்படும் நண்டாங்கோயிலில் சந்திரன் அமர்ந்நிலையில் இருக்கிறார். இங்கு வந்து இறைவனையும், இறைவியையும், சந்திரனையும் வணங்கினால் சந்திரனால் விளையும் சந்திராஷ்டம் தடை தகர்ந்து, சந்திர தோஷம் நீங்கும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)