சிதம்பரம் நடராசர் கோவில் பற்றிய தகவல்கள்..!

Punniya seelan
0

 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                சிதம்பரம் நடராசர் கோவில் பற்றிய தகவல்கள்..!

                சிதம்பரம் நடராசர் கோவில்...!!


சிதம்பரம் நடராசர் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராசர் கோவில் என்றும், சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றும், சிதம்பரம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.



சிலையின் வரலாறு :


சிங்கவர்மன் என்னும் மன்னன் தனது பாவமும் தோஷ்மும் தீர, தில்லை சிவகங்கை குளத்தினில் மூழ்கி குணமடைந்ததால், தில்லை நடராசருக்கு ஒரு சிலை வடிக்க எண்ணினான். அதன்படி, நமச்சிவாய முத்து என்ற ஸ்தபதியைக் கொண்டு தாமிரத்தால் ஆன சிலையை வடிவமைத்தான். இதுவே தில்லை நடராசர் சிலையாகும். சிலையின் அழகில் மயங்கிய மன்னன், அடுத்த சிலையினை தங்கத்தால் உருவாக்கச் செய்தான். அடுத்து இரண்டு சிலைகள் அதேபோல் செய்தான். பின் இதுபோல் சிலையை இனி உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கையை அரசன் துண்டித்துவிட்டான். சிற்பிக்கு அசராது மரத்தால் ஆன கை செய்து உதவியது, அதற்கு பிறகு மற்றொரு ஐந்தாவது சிலையினை செய்தான். இதனால் ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராசர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும்.


கோவிலின் கட்டிட அமைப்பு :


இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். 


கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.


கோவிலின் சிறப்புகள் :


சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.


சிதம்பர ரகசியம் :


மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.


பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது, இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது. 


பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.


சிலையின் சிறப்புகள் :


சிலையின் முன்னால் இருந்து பார்த்தால் நடராசர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில் இருப்பார். பின்புறம் இருந்து பார்த்தால் ஒருகால் தூக்கி ஆடுவது தெரியும்.


பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்யும் போது, முகத்தில் வழிந்து, மூக்குநுனி வழியே கரத்தினில் வீழ்ந்து, பின் விரலில் வழிந்து, தூக்கிய திருவடியின் மேல் விழுந்து, இடது பாதத்தின் பெருவிரல் வழியே கீழே நூல்பிடித்தால் போல் விழுகிறது.


எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராசர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் திருமூலரும் குறிப்பிட்டுள்ளார்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை  இலவசமாக  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)