சூடான பானங்களை கப்பில் ஊற்றும் போது, கப் உடைந்து போவது... ஏன்?

Punniya seelan
0


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                சூடான பானங்களை கப்பில் ஊற்றும் போது, கப் உடைந்து போவது... ஏன்?

                கேஸ் (பயள) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகி விடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?


🏮 நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-டீருவுயுNநு) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.


🏮 ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (ஐபnவைழைn pழiவெ) அடைய வேண்டும்.


🏮 இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.


🏮 நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக் கொள்ளும் வெப்பநிலை 360 ̊ஊ ஆகும். சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது. அப்போது ஒரு தீக்குச்சி அல்லது லைட்டரால் பற்ற வைக்கும் போது சமையல் வாயு 360 ̊ஊ வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது. அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது.


🏮 சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும், ஆக்சிஜனும் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம், ரப்பர் டியூப்பை தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லை. 


🏮 சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் மிக மிக உயர்ந்த அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை விட (யுவாஅழளிhநசiஉ Pசநளளரசந) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன், அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.


🏮 இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரிபொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.

பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை ஊற்றும் போது சூட்டினால் கப் உடைந்து போவதுண்டு ஏன்?


☕ வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும். கண்ணாடி கப்பில் சூடான பானங்களை ஊற்றும் போது, கப்பின் உட்பகுதி முதலில் வெப்பத்தால் விரிவடைகிறது.


☕ வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று தாமதமாகவே வெளிப்பகுதி விரிவடையும். சூடு அதிகம் இருந்தால் உட்பரப்பு முதலில் விரிவடைந்து, வெளிப்பரப்பு விரிவடைய தாமதமாகும் போது கப் உடைந்து விடுகிறது.

ஒரு எவர்சில்வர் கரண்டியை கப்பில் வைத்து விட்டு, பின்னர் சூடான பானத்தை ஊற்றினால் கப் உடையும் வாய்ப்பு குறையும். ஏன்?


☕ பெரும்பான்மையான உலோகங்கள், கண்ணாடி அல்லது பீங்கானை விட வெப்பத்தை அதிகமாகக் கடத்தும் தன்மையுள்ளவை.


☕ ஒரு எவர்சில்வர் அல்லது வெள்ளிக் கரண்டியை கப்பினுள் வைத்துவிட்டு பின்னர் சூடான பானத்தை ஊற்றும்போது அந்தக் கரண்டி பெருமளவில் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால் கப் சூடாவதும் விரிவடைவதும் குறைகிறது.


☕ எனவே கப் உடையும் வாய்ப்பும் கணிசமாக குறைந்து போகிறது.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

Post a Comment

0Comments

Post a Comment (0)